திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, ஆன்லைனில் டிக்கெட் எடுப்பது எப்படி? இது குறித்த முழு தகவல் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக கருதப்படும் திருப்பதி பெருமாள் கோயிலுக்கு நீங்கள் ஆன்லைனிலேயே டிக்கெட் புக்கிங் செய்து, பின்னர் கூட்டத்தில் சிக்காமல் சாமியை தரிசனம் செய்யலாம். அது எப்படி தெரியுமா? இதோ அதற்கான டிப்ஸ்
1/5
திருப்பதி
திருப்பதி ஏழுமையான் கோயிலுக்கு செல்பவர்களில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் அதிகம். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை புரிகின்றனர். இதில் பெரும்பாலானோர், பொது தரிசனத்தில் வந்தாலும், இன்னும் பலர் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டில் வருகின்றனர். இன்னும் சிலர் விஐபி டிக்கெட் போன்றவை மூலம் தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் புக்கிங் செய்ய, பக்தர்கள் முதலில், Tirumala Tirupati Devasthanams ஆன்லைன் தளத்திற்குள் செல்ல வேண்டும். மொபைலாக இருந்தால் செயலி வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
2/5
ஸ்பெஷல் எண்ட்ரி
தேவஸ்தானத்தின் இணையதளத்தில், Special Entry dharshan எனும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதனை க்ளிக் செய்து, உங்களது மொபைல் நம்பர் போட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
3/5
தரிசனம்
தளத்தில் நீங்கள் தரிசனம் மேற்கொள்வதற்கான தேதி, நேரம் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். எத்தனை பேர் தரிசனம் செய்ய வேண்டுமோ அவர்களின் விவரங்களை உள்ளிட்டு, பணத்தை செலுத்தி டிக்கெட் புக்கிங் செய்யலாம்.
4/5
முக்கிய ஆவணங்கள்
இந்த டிக்கெட் புக்கிங்கிர்கு, ஆதார் அட்டை மிகவும் அவசியம் ஆகும். இரண்டு மாதங்கள் கழித்து வரப்போகும் தரிசனத்திற்குதான் மாதத்தில் ஒரு நாள் காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் தங்களது தளத்தில் ஆன்லைன் புக்கிங்கை திறக்கும். உதாரணத்திற்கு, இந்த ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான டிக்கெட் புக்கிங் ஆகஸ்ட் 18ஆம் தேதியான இன்று தொடங்கியது. இந்த டிக்கெட் புக்கிங் காலை 10 மணிக்கே தொடங்கி ஒரு சில மணி நேரங்களில் முடிந்து விட்டது.
5/5
ஆவண சரிபார்ப்பு
புக்கிங் செய்த ப்ரிண்ட் அவுட், ஆதார் அட்டை நகல் அல்லது ஒரிஜினல் உள்ளிட்டவற்றை உங்களுக்கு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் எடுத்து செல்ல வேண்டும். பரிசோதகர்கள் இதை சரி பார்த்து விட்டு உங்களை உள்ளே அனுமதிப்பர்.