• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /நீண்ட நாளுக்கு பிறகு ரெட் தக்காளி... பள்ளி விடுமுறையா...? சென்னை வானிலை அப்டேட்ஸ்

நீண்ட நாளுக்கு பிறகு ரெட் தக்காளி... பள்ளி விடுமுறையா...? சென்னை வானிலை அப்டேட்ஸ்

Written BySudharsan G
Published: Sep 06, 2026, 23:46 IST|Updated: Sep 06, 2026, 23:50 IST
joinshare
சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை காலையில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த ஆண்டின் மிகவும் தீவிரமான இடியுடன் கூடிய மழைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்றிரவு சென்னையின் பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Chennai Rains1/5

சென்னை மழை

சென்னையில் இன்று (செப்.6) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசனா/மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chennai Rains2/5

சென்னை மழை

சென்னையில் எம்.ஆர்.சி. நகர், பட்டினம்பாக்கம், மந்தைவெளி, நந்தவனம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் இன்றிரவு மிதமான மழை பெய்தது. நாளையும் (செப். 7) மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசனா மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
Chennai Rains3/5

சென்னை மழை

இந்நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் வெப்பம் பெரும் இடியுடன் கூடிய மழையைக் கொண்டு வருகிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நீண்ட நாளுக்கு பிறகு இந்த 4 மாவட்டங்களின் மேல் ரெட் தக்காளி தென்பட்டுள்ளது என்றும் இடி மின்னல் காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
Chennai Rains4/5

சென்னை மழை

அவரது X பக்கத்தில், "காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த ஆண்டின் மிகவும் தீவிரமான இடியுடன் கூடிய மழைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் பகல் பொழுதில் கடும் வெப்பம் இருந்த நிலையில் இன்றிரவு மழையும் அதிகளவில் இருக்கலாம் என பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் சூறாவளி சென்னை நோக்கி நகரும்போது இன்னும் வலிமையடையும் என நம்புவோம் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே மழை மேகங்கள் முதர்ச்சியடைந்திருக்கும் வேலையில், சென்னை நெருங்கும்போது அவற்றின் நிலை என்னவென்பதுதான் பெரிய கேள்வி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Chennai Rains5/5

சென்னை மழை

டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் அவரது X பதிவில், "சுட்டெரிக்கும் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் வழக்கமான இடியுடன் கூடிய மழை பெய்யும்" என குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கில் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை, சென்னையில் இரவை தொடர்ந்து அதிகாலையிலும் மழை தொடர்ந்தால் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் பள்ளி விடுமுறைக்கு வாய்ப்புள்ளதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.