• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /17 வருஷத்திற்கு பின்... வெல்லுமா இந்தியா? IND vs NZ முதல் டெஸ்ட் எங்கு, எப்போது பார்க்கலாம்?

17 வருஷத்திற்கு பின்... வெல்லுமா இந்தியா? IND vs NZ முதல் டெஸ்ட் எங்கு, எப்போது பார்க்கலாம்?

Written BySudharsan G
Published: Nov 18, 2026, 23:42 IST|Updated: Nov 18, 2026, 23:47 IST
joinshare
இந்திய அணி கடைசியாக 2009இல் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றது. கடந்த 58 ஆண்டுகளில் அந்த ஒரே ஒரு வெற்றியை மட்டுமே இந்திய அணி அங்கு பெற்றிருக்கிறது. அந்த வகையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இப்போட்டி எங்கு, எப்போது பார்க்கலாம்...?, இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு இதோ...

இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி நவ. 19 - நவ.23 தேதிகளில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் நவ. 27 - டிச. 1 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

IND vs NZ Test1/5

IND vs NZ டெஸ்ட் தொடர்

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே டி20ஐ தொடரை 3-2 என்ற கணக்கிலும், ஓடிஐ தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்திய அணி வென்றிருக்கிறது. அடுத்து டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
IND vs NZ Test2/5

முதல் டெஸ்ட் எங்கு, எப்போது காணலாம்?

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவ. 19) அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. Sony Liv ஓடிடி தளத்திலும், Sony Sports நெட்வோர்க் தொலைக்காட்சி சேனலிலும் இந்த டெஸ்ட் போட்டியை நேரில் காணலாம். இந்த வெல்லிங்டன் பேஸின் ரிசர்வ் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. சுப்மான் கில் தலைமையில் இந்திய அணியும், டாம் லேதம் தலைமையில் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.
IND vs NZ Test3/5

பழிவாங்குமா இந்திய அணி?

கடந்த 2024-25 காலகட்டத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியது. சொந்த மண்ணில் இந்திய அணி வைட்வாஷ் ஆனது. இதற்கு இந்திய அணி பழிவாங்குமா என்ற கேள்வியும் ரசிகர்களிடத்தில் உள்ளது. இந்திய அணி இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளை நியூசிலாந்து மண்ணில் விளையாடியிருக்கிறது. அதில் 5இல் மட்டுமே இந்திய அணி வென்றிருக்கிறது.
IND vs NZ Test4/5

தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி

1968-ல் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதன்பின், 2009இல் 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது. அதாவது, 1968-க்கு பின், கடந்த 58 ஆண்டுகளாக நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வென்றிருக்கிறது. நியூசிலாந்து மண்ணில் சாதனை படைப்பதற்கு மட்டுமின்றி, அடுத்தாண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவும் இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வெல்ல வேண்டும்.
IND vs NZ Test5/5

முதல் போட்டிக்கான இந்திய அணி பிளேயிங் 11

இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் (சி), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், ஆகாஷ் தீப், குர்னூர் ப்ரார், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா. நியூசிலாந்து அணி: டாம் லேதம் (கேப்டன்), டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளண்டெல், கிளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி.
TAGS:
Indian Cricket Team

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

2

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

3

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

4

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

5

TN Weather: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.