India Predicted Playing XI Against NZ 2nd Test: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (நவம்பர் 27) வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியின் பிளேயிங் 11ல் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
1/5
நியூசிலாந்து - இந்தியா 2வது டெஸ்ட் போட்டி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி நாளை (நவம்பர் 27) வெள்ளிக்கிழமை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்திய நிலவரப்படி போட்டி சரியாக அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
2/5
சிராஜ், ஜடேஜாவுக்கு வாய்ப்பு?
முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படாது விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இந்த சூழலில், இரண்டாவது டெஸ்ட்டில் அவர்களை பிளேயிங் 11ல் தலைமை பயிற்சியாளர் கம்பீர் சேர்ப்பாரா என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் உள்ளது.
3/5
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11
நாளைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முகமது சிராஜ் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11: கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா.
4/5
NZ vs IND 2வது டெஸ்ட்: இந்திய அணி வெற்றி பெறுமா?
முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போட்டியில் டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்ல இந்திய அணி இப்போட்டி உட்பட வரும் டெஸ்ட் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும்.
5/5
நியூசிலாந்து அணியின் உத்தேச பிளேயிங் 11
டாம் லாதம் (கேப்டன்), டெவான் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி.