சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்த ரயில்வே விதிப்படி, முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுக்கை வசதியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1/5
ரயில் பயணிகளுக்கு முக்கிய கட்டுப்பாடு
ஸ்லீப்பர், ஏசி பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுக்கையில் தூங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் மிடில் பர்த்தை மடக்கி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ரயில்வே விதியை உறுதி செய்துள்ளது.
2/5
பகலில் மிடில் பர்த்தை பயன்படுத்த முடியாதா?
காலை 6 முதல் இரவு 10 மணி வரை மிடில் பரத்தை பயன்படுத்தக்கூடாது. அந்நேரங்களில் கீழ்படுக்கையை இருக்கைகளாக பயன்படுத்த வேண்டும்.
ஒரே வரிசையில் உள்ள பயணிகள் அனைவரும் அமர்ந்து பயணிக்க வசதி செய்ய வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுக்கை வசதியை பயன்படுத்தலாம்.
3/5
யாருக்கு இந்த விதியில் இருந்து விலக்கு?
முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களின் ஓய்வு மற்றும் தூக்கத்துக்கு சக பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
4/5
பயணிகளுக்கு இடையே சச்சரவு ஏற்படுவதை தடுக்க விதி
பகல் நேரத்தில் மிடில் பர்த்தை பயன்படுத்தி தூங்குவதால், கீழ்ப்படுக்கையில் அமர வேண்டிய பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்த்து, அனைவருக்கும் அமர்ந்து பயணிக்கும் வசதியை உறுதி செய்வதே இந்த நேர கட்டுப்பாட்டின் நோக்கம் ஆகும்.
5/5
ரயில்வே விதியை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!
படுக்கை வசதியை பயன்படுத்துவதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீதிமன்றம் உறுதி செய்தது.
2017ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி பாலசுப்ரமணியன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
விதியை எதிர்த்து மனுதாரர் ரயில்வே போலீசார் அல்லது ஊழியர்களிடம் உதவி கோரவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.
கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தேவைக்கேற்ப ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.