• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ரயிலில் சத்தமாக போன் பயன்படுத்தினால் 6 மாதம் சிறை? ரயில்வே எச்சரிக்கை!

ரயிலில் சத்தமாக போன் பயன்படுத்தினால் 6 மாதம் சிறை? ரயில்வே எச்சரிக்கை!

Written ByR Balaji
Published: Nov 21, 2026, 16:16 IST|Updated: Nov 21, 2026, 16:18 IST
joinshare

ரயில் பயணத்தின்போது ஸ்பீக்கரில் சத்தமாக பாடல் கேட்பது அல்லது வீடியோ பார்ப்பது போன்ற செயல்களால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால், 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
 

IRCTC1/5

ரயிலில் சத்தமாக போன் பார்த்தால் சிறை தண்டனை? ரயில்வே எச்சரிக்கை

ரயிலில் பயணம் செய்யும்போது ஸ்பீக்கரில் பாடல் கேட்பது, அதிக சத்தத்தில் வீடியோ பார்ப்பது, உரத்த குரலில் போனில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறீர்கள் என்றால் கவனமாக இருங்கள். சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
IRCTC2/5

ரயில்வேயின் புதிய அறிவிப்பு

ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் மொபைல் போன்களை பயன்படுத்தும்போது மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்காக தனது நான்கு பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது, நீண்ட நேரம் சத்தமாக பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
IRCTC3/5

6 மாதங்கள் வரை சிறை தண்டனை

சக பயணிகளின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோர் மீது ரயில்வே சட்டத்தின் பிரிவு 145-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம். இதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ரூ. 1000 அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். சில சூழல்களில் அபராதமும் சிறை தண்டனையும் சேர்த்தும் விதிக்க வாய்ப்புள்ளது.
IRCTC4/5

யாரால் நடவடிக்கை எடுக்க முடியும்?

ரயிலில் அதிக சத்தம் எழுப்பி மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பயணிகள் குறித்து புகார் அளிக்கலாம். இதன் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) அல்லது டிக்கெட் பரிசோதனை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். குறிப்பாக, இரவு நேரம் மற்றும் நீண்ட தூரப் பயணங்களின்போது சக பயணிகளின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பது அவசியம்.
IRCTC5/5

ரயில் பயணிகளின் கவனத்திற்கு

பாடலோ அல்லது வீடியோ பார்த்தால் ஹெட்போன் அல்லது இயர்போன் மூலம் கேளுங்கள். மொபைலில் பேசும்போது சத்தமாக பேசாமல் குரலை குறைத்து பேசுங்கள். ஸ்பீக்கரை பயன்படுத்தி சத்தமாக பாடல்கள் ஒலிக்க விடாதீர்கள். இரவு நேரங்களில் மற்ற பயணிகளின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள்.
TAGS:
India

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.