IPL 2027 Mini Auction: 2027ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் அதிகம் கவனம் ஈர்க்கக் கூடிய மூன்று தமிழ்நாட்டு வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கோவாவில் நடைபெறும் இந்த மினி ஏலத்திற்கு இன்னும் 20 நாட்களுக்கும் குறைவாகவே இருப்பதால் ஒவ்வொரு அணியின் வியூகம் அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
1/5
மினி ஏலத்தில் குறிப்பிட்ட வீரர்கள் மவுசு
ஐபிஎல் மினி ஏலத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 10 ஐபிஎல் அணிகளுக்கு 41 இந்திய வீரர்கள் மற்றும் 26 வெளிநாட்டு வீரர்கள் என 66 வீரர்கள் தேவையாக உள்ளது. அதிலும் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக மவுசு இருக்கும்.
2/5
கவனம் ஈர்க்கும் 3 தமிழக வீரர்கள்
1,220 வீரர்கள் ஏலத்திற்கு விண்ணப்பத்திற்கும் நிலையில், இதில் தங்களுக்கு தேவையான வீரர்கள் யார் யார் என்பதை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்யும். அதன்படி, ஏலத்திற்கான இறுதி வீரர்கள் பட்டியல் வெளியாகும். இந்த இறுதிப்பட்டியல் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், மினி ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மூன்று தமிழ்நாட்டு வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
3/5
சன்னி சந்து
தமிழ்நாட்டு அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான சன்னி சந்து இதுவரை 6 டி20 போட்டிகளில் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்தாண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 15 ரன்களை மட்டுமே அடித்தார். நடப்பு தொடரில் கூட 7 லீக் போட்டிகளில் 4இல் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் முதல் மூன்று போட்டிகளிலேயே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் கடைசி லீக் போட்டியில் 17 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உள்பட 44 ரன்களை அடித்த அவர் பந்துவீச்சில் 4 விக்கெட்டையும் எடுத்து கவனம் ஈர்த்துள்ளார். 23 வயது வீரரான இவர் டிஎன்பிஎல் தொடரில் கூட 33 போட்டிகளில் 448 ரன்களையும், 30 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இளம் இந்திய வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை தேடும் சிஎஸ்கே, மும்பை, டெல்லி, கேகேஆர், லக்னோ அணிகள் இவரை குறைந்து விலையில் எடுக்கலாம்.
4/5
தீபேஷ் தேவந்திரன்
இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த U19 உலகக் கோப்பைத் தொடரிலேயே இவர் அதிகம் கவனம் ஈர்த்தார். 19 வயது வீரரான இவர் மணிக்கு 140 கி.மீ., வேகத்தில் பந்துவீசும் திறன்தான் இவரை அதிகம் கவனம் ஈர்க்க வைத்தது. தமிழ்நாடு அணிக்காக இவர் ரஞ்சி கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியிருக்கிறார். சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கு இவர் தேர்வு செய்யப்படவில்லை. டிஎன்பிஎல் தொடரில் மதுரை அணிக்காக விளையாடிய இவர் 6 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார், அதிலும் சேலம் அணிக்கு எதிராக 3 விக்கெட்டை வீழ்த்தினார். இவர் மினி ஏலத்திற்கு பதிவு செய்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் இவரை லக்னோ அணி எடுக்க அதிக வாய்ப்புள்ளது. லக்னோ அணி வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணின் கீழ் இவர் பயிற்சி பெற்றால் நிச்சயம் எதிர்காலத்தில் இந்திய அணிக்கும் பயனளிக்கும்.
5/5
ராஜ்குமார்
தமிழ்நாட்டு அணிக்காக இவர் 14 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 276 ரன்களையும், 7 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான இவர் தமிழ்நாடு அணியின் பினிஷராகவும் நடப்பாண்டில் சிறப்பாக விளையாடினார். ரயில்வேஸ் அணிக்காக 13 பந்துகளில் 31 ரன்களையும், ஜம்மு காஷ்மீர் அணிக்காக 10 பந்துகளில் 24 ரன்களையும், சௌராஷ்டிரா அணிக்காக 24 பந்துகளில் 36 ரன்களையும் அடித்து கவனம் ஈர்த்தார். டிஎன்பிஎல் தொடரில் 72 போட்டிகளில் விளையாடி 967 ரன்களையும், 58 விக்கெட்டுகளையும் இவர் வீழ்த்தி உள்ளார். 33 வயதான இவரை பேக்-அப் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக எடுத்துவைக்கலாம். CSK கூட இவரை எடுக்க நல்ல வாய்ப்புள்ளது.