2027 ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள 3 வெளிநாட்டு வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
ஐபிஎல் மினி ஏலம் என்றாலே குறைந்த வீரர்கள் ஏலத்திற்கு வருவார்கள். ஆனால் அதே நேரத்தில் வீரர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும். எனவே, குறிப்பிட்ட வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள். குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள்.
1/5
ஐபிஎல் மினி ஏலம்
2027ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி அன்று நடைபெற கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் கோவா சொகுசு விடுதியில் நடைபெற இருக்கிறது. காலை 11 மணிக்கு தொடங்கி ஒரே நாளில் நடைபெற உள்ளது.
2/5
66 வீரர்கள் தேவை
10 அணிகளுக்கும் மொத்தமாக 66 வீரர்கள் தேவை, 25 வெளிநாட்டு வீரர்கள் அடக்கம். அந்த வகையில், வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள 3 வெளிநாட்டுவீரர்களை இங்கு காணலாம்.
3/5
ஷாய் ஹோப்
இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ தொடரில் 3 இன்னிங்ஸ்களில் 278 ரன்களையும்; டி20ஐ தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 261 ரன்களையும் அவர் அடித்திருந்தார். ஓடிஐ தொடரில் அவரது சராசரி 167.00, டி20ஐ தொடரில் அவரது சராசரி 130.50 ஆகும். அதுவும் விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன் மெட்ரீயலான இவர் டாப் ஆர்டரில் விளையாடக் கூடியவர். அதிக தொகை வைத்திருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இவர் அதிக தேவைப்படுவார். எனவே இவருக்கு கோடிகள் கொட்டுவது உறுதி.
4/5
ஷிம்ரன் ஹெட்மயர்
டாப் ஆர்டரில் விளையாடும் அதிரடி பேட்டரான ஷிம்ரோன் ஹெட்மயர் தொடர்ந்து பல்வேறு லீக் தொடர்களில் மிரட்டலாக விளையாடி வருகிறார். ரூ.11 கோடிக்கு அவரை தக்கவைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே தற்போது அவரை கழட்டிவிட்டுள்ளது. இந்தச் சூழலில், ஹெட்மயருக்கு ஏலத்தில் அதிக டிமாண்ட் இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இவரை எடுக்க நினைக்கும். இதனால் இவரும் அதிக விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது.
5/5
டிரன்ட் போல்ட்
இடதுகை வேகப்பந்துவீச்சாளரான டிரன்ட் போல்ட் ரூ.12.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் இரண்டு சீசன்களுக்கு முன் எடுக்கப்பட்டார். அர்ஷ்தீப்பின் வருகையால் மும்பை அவரை விடுவித்திருக்கிறது. இருப்பினும் அவருக்கு இன்னும் டிமாண்ட் குறையவில்லை. சிஎஸ்கே அணிக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவை இருக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியோ மிட்செல் ஸ்டார்க் மற்றும் நடராஜனை கழட்டிவிட்டிருப்பதால் அந்த அணியும் இவரை எடுக்க முயற்சிக்கும். எனவே நிச்சயம் இவரும் பல கோடிகளுக்கு ஏலம் போவார். பதிரானா உடற்தகுதியுடன் இருந்தால் அவருக்கும் கோடிகள் கொட்ட அதிக வாய்ப்புள்ளது.