• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை முதல் நிறுத்தமா? அதிரடி அறிவிப்பு

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை முதல் நிறுத்தமா? அதிரடி அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Oct 31, 2026, 02:45 PM IST|Updated: Oct 31, 2026, 02:55 PM IST
joinshare
Vadapalani Poonamallee Metro Rail Latest: சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ சேவை நாளை முதல் இயங்காது என தகவலுக்கு மெட்ரோ அதிகாரிகள் மறுத்துள்ளது. வழக்கம்போல் வடபழனி - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vadapalani Poonamallee Metro Rail Latest: போரூர் முதல் வடபழனி இடையே ரயிலை இயக்க பெறப்பட்ட தற்காலிக அனுமதி அடுத்த மாதம் நவம்பர் 30ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

Chennai Metro Rail1/5

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில்

சென்னையில் மெட்ரோ ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இதில் பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11ம் தேதி முதல் வடபழனி - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது.
Chennai Metro Rail2/5

பூந்தமல்லி - வடபழனி இடையே நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தமா?

பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் நிறுத்தப்படும் என தகவல்கள் கசிந்தது.
Chennai Metro Rail3/5

வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

இதற்கு தற்போது மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, நாளை முதல் பூந்தமல்லி முதல் வடபழனி இடையே வழக்கம்போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்ற தகவலுக்கு மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பூந்தமல்லி - வடபழனி இடையே வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Chennai Metro Rail4/5

பூந்தமல்லி மெட்ரோ ரயில் கால அட்டவணையில் எவ்வித மாற்றமின்றி

மெட்ரோ ரயில் சேவைக்கான அனுமதி காலாவதியானதாக வெளியான தவறானது என தெரிவித்துள்ள மெட்ரோ நிர்வாகம், தொடர்ந்து, ரயில்களை இயக்குவதற்கான உரிய அனுமதி நடைமுறையில் உள்ளதாகவும், தற்போதைய கால அட்டவணையில் எவ்வித மாற்றமின்றி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Metro Rail5/5

மெட்ரோ ரயில் இயக்க தற்காலிக அனுமதி நீட்டிப்பு

போரூர் முதல் வடபழனி இடையே ரயிலை இயக்க பெறப்பட்ட தற்காலிக அனுமதி அடுத்த மாதம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து நிரந்தர அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
TAGS:
Chennai

Trending

  • News
  • Photos
  • Videos
தீபாவளியில் உருவாகும் மங்களகரமான யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பொற்காலம் ஆரம்பம்

தீபாவளியில் உருவாகும் மங்களகரமான யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பொற்காலம் ஆரம்பம்

2

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்: நாளை முதல் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

3

'தூஸ்ரா' படத்திற்கு எதிராக சவுரவ் கங்குலி வழக்கு.. பின்னணி என்ன? Explained

4

ரூ.200க்கு 10 மளிகைப் பொருட்கள்.. ரேஷன் அட்டை இல்லாமல் வாங்க முடியுமா? முக்கிய அறிவிப்பு

5

கே.என். நேரு ஊழல் வழக்கில்... சீரியல் நடிகைக்கு தொடர்பா...? அவரே கொடுத்த விளக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.