• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /இஷான் கிஷன் மீது கம்பீர் அதிருப்தி? ஆப்கன் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு அடித்தது ஜாக்பாட்!

இஷான் கிஷன் மீது கம்பீர் அதிருப்தி? ஆப்கன் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு அடித்தது ஜாக்பாட்!

Written ByR Balaji
Published: Sep 06, 2026, 18:47 IST|Updated: Sep 06, 2026, 18:51 IST
joinshare

இஷான் கிஷன் மீது கம்பீர் அதிருப்தியில் உள்ளதால், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

Indian Cricket 1/5

ஆப்கானிஸ்தான் டி20 தொடர்

இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. செப்.13, 15, 17 ஆகிய தேதிகளில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன.
Indian Cricket 2/5

டாப் ஆர்டரில் யார்?

இந்திய அணியில் அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 3 பேர் மட்டுமே டாப் ஆர்டரில் களமிறங்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Indian Cricket 3/5

கம்பீர் மீது இஷான் விமர்சனம்?

துலீப் டிராபியில் முகமது ஷமிக்கு ஆதரவாக பேசிய இஷான் கிஷன், வயது காரணமாக அவரை இந்திய அணியில் இருந்து ஒதுக்கக்கூடாது என தெரிவித்தார். இது கம்பீருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Indian Cricket 4/5

சாம்சனுக்கு வாய்ப்பு?

இஷான் கிஷனின் கருத்தால் அதிருப்தியடைந்த கம்பீர், ஆப்கானிஸ்தான் தொடரில் ஒன்டவுன் இடத்தில் சஞ்சு சாம்சனை களமிறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் பிரப்சிம்ரன் சிங்குக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Indian Cricket 5/5

இஷானுக்கு பின்னடைவு?

சமீபகால டி20 போட்டிகளில் இஷான் கிஷனின் பேட்டிங் வேகம் குறைந்திருப்பதும் அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இனி ஒன்டவுன் இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
TAGS:
Cricket

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.