• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ரூ. 1000 கோடியை அடிக்குமா ஜெயிலர் 2? இதுவரை அடித்த வசூல் எவ்வளவு?

ரூ. 1000 கோடியை அடிக்குமா ஜெயிலர் 2? இதுவரை அடித்த வசூல் எவ்வளவு?

Written ByR Balaji
Published: Nov 02, 2026, 05:42 PM IST|Updated: Nov 02, 2026, 05:46 PM IST
joinshare

Jailer 2 Collection Latest Update: ஜெயிலர் 2 திரைப்படம் வெளியான 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, ரூ.1,000 கோடி இலக்கை நோக்கி நகர்கிறது.
 

Tamil Cinema1/5

800 கோடி வசூலை கடந்த ஜெயிலர் 2..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், தற்போது வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
Tamil Cinema2/5

முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் வரவேற்பு!

அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு திரையரங்குகளிலும் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்தது. இதனால், வெளியான முதல் சில நாட்களிலேயே வசூலிலை குவித்தது.
Tamil Cinema3/5

3 வாரங்களை கடந்தும் தொடரும் வசூல் வேட்டை

பொதுவாக பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் முதல் வாரங்களில் அதிக வசூலை பெற்று, அடுத்தடுத்த நாட்களில் வேகம் குறைவது வழக்கம். ஆனால், ஜெயிலர் 2 திரைப்படம் மூன்று வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்று வருகிறது. வார நாட்கள், விடுமுறை நாட்கள் என தொடர்ந்து பார்வையாளர்கள் வருகை இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu4/5

800 கோடி ரூபாய் வசூல்.. தமிழ் சினிமாவில் புதிய சாதனை!

வெளியான 18 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.800 கோடி வசூலை கடந்த முதல் தமிழ் திரைப்படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. ஏற்கெனவே ரஜினியின் 2.0 திரைப்படத்தின் வசூல் சாதனையையும் இப்படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
Tamil Cinema5/5

அடுத்த இலக்கு ரூ.1,000 கோடி.. ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து வசூலில் முன்னேற்றம் கண்டு வரும் ஜெயிலர் 2 திரைப்படம், தற்போது ரூ.1,000 கோடி வசூல் என்ற புதிய இலக்கை நோக்கி நகருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்னும் எத்தனை நாட்கள் இப்படத்தின் வசூல் வேகம் நீடிக்கும், ஆயிரம் கோடி கிளப்பில் இணையுமா என்பதுதான் திரையுலகினர் மற்றும் ரஜினி ரசிகர்களின் அடுத்த கேள்வியாக உள்ளது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
பிரபல ரவுடி 'குட்டி சாக்கு' படுகொலை... 12 மணிநேரத்தில் 5 பேர் கைது - மதுரை போலீசார் அதிரடி

பிரபல ரவுடி 'குட்டி சாக்கு' படுகொலை... 12 மணிநேரத்தில் 5 பேர் கைது - மதுரை போலீசார் அதிரடி

2

Zee Enterntainment நிறுவனத்தில் முக்கிய நியமனங்கள் - தலைமை AI அதிகாரியாக துஷார் வோரா நியமனம்

3

வாட்ஸ் அப்பில் PF சேவை.. பேலன்ஸ் செக் செய்வது எப்படி? முழு விவரம்

4

Explained : ‘முரசு’ புயல் பெயர் காரணம்! ஏன் இந்த பெயர் வந்தது? இதோ முழு விவரம்..

5

பிபிஓ, ஐடி வேலைகளுக்கு ஆப்பு.. தூக்கி சாப்பிடும் AI.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்! Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.