• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அலப்பறை கிளப்பிய ஜெயிலர் 2! முதல் நாள் வசூல் எவ்வளவு? அடடேய்..இவ்ளோ கோடியா?

அலப்பறை கிளப்பிய ஜெயிலர் 2! முதல் நாள் வசூல் எவ்வளவு? அடடேய்..இவ்ளோ கோடியா?

Written ByYuvashree M
Published: Oct 16, 2026, 09:45 AM IST|Updated: Oct 16, 2026, 09:55 AM IST
joinshare
Jailer 2 Box Office Collection : ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம், மக்களை கவர்ந்திருக்கும் நிலையில் அந்த படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Jailer 2 Box Office Collection : ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சமயத்தில், அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Rajinikanth Starrer Nelson Directed Jailer 21/5

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் 2

2023ல் வெளியான ஜெயிலர் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஜெயிலர் 2 திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சொன்னது போலவே அக்டோபர் 15ஆம் தேதியான நேற்று ஜெயிலர் 2 வெளியாகி இருக்கிறது.
Jailer 2 Cast and crew2/5

ஜெயிலர் 2 படத்தின் நடிகர்கள்

ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். இவர்கள் அல்லாமல் படத்தில் சில முக்கிய கேமியோக்களும் இருக்கிறது.
Jailer 2 Cameo Characters3/5

ஜெயிலர் 2 திரைப்படத்தில் கேமியோவில் நடித்தவர்கள்

ஜெயிலர் 2 திரைப்படத்தில் புதிதாக நடிகர் ரித்திக் ரோஷன் ‘ரோடி’ எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார். அதே போல, நடிகர் விஜய் சேதுபதியும் க்ளைமேக்ஸில் வருகிறார். நடிகை வித்யா பாலன் வில்லனாக நடித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள், ‘படத்தில் கேமியோ இல்லை, கேமியோதான் படமே’ என்று கூறி வருகின்றனர்.
Jailer 2 collection vs Coolie Collection4/5

ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் vs கூலி முதல் நாள் வசூல்

ஜெயிலர் 2 திரைப்படம், பட்டித்தொட்டியெங்கும் நல்ல விமர்சனத்தை பெற்றிருப்பதையொட்டி, முதல் நாளே இந்தியாவில் மட்டும் ரூ.70.25 கோடி வரை வசூலித்திருக்கிறது. ரஜினியின் இதற்கு முந்தைய படமான கூலி, முதல் நாளில் ரூ.65 கோடியை மட்டுமே வசூலித்திருந்தது.
Jailer 2 Overseas Box Office Collection5/5

ஜெயிலர் 2 வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்

வெளிநாடுகளில், ஜெயிலர் 2 திரைப்படம் சுமார் ரூ.55 கோடி வரை வசூலித்திருக்கிறது. மொத்தத்தில் இப்படம் சுமார் ரூ.125.25 கோடி வரை வசூலித்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ வசூல் வரும் வரை காத்திருக்க வேண்டியது நல்லது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.