இந்திய அளவில் பெரிய ஹிட் அடித்திருக்கும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை கனடாவில் உள்ள York Cinemas திரையிட மாட்டோ என தெரிவித்துள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம், ஜெயிலர் 2. இந்த திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதை ஒட்டி, இதை பார்க்க தியேட்டரில் கூட்டம் அலைமோதுகிறது. அதைத்தாண்டி, இந்த படத்தில் ஷோக்கள் கேன்சல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1/5
ஜெயிலர் 2
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம், ஜெயிலர் 2. இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடைப்போட்டு வருகிறது.
2/5
ஜெயிலர் 2 500 கோடி
ஜெயிலர் 2 திரைப்படம், வெளியான 5 நாட்களில், ரு.500 கோடியை கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்த சமயத்தில், இப்படத்தை கனடாவில் திரையிடுவது சிக்கலில் இருக்கிறது.
3/5
ரஜினிக்கு வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள்
ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஜப்பான், மலேசியா சிங்கப்பூரைத்தாண்டி கனடாவிலும் ஜெயிலர் 2 படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், போகிற போக்கை பார்த்தால் கனடாவில் ஜெயிலர் 2 படத்தை பார்க்க முடியாமல் போகும் என சந்தேகிக்கப்படுகிறது.
4/5
கனடா யோர்க் சினிமாஸ்
கனடாவில் York Cinemas-ற்கும், வட அமெரிக்க திரைப்பட விநியோகிஸ்தர்களுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு காரணமாக, ஜெயிலர் 2 திரைப்படம் திரையிடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டும் என தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் அக்டோபர் 21ஆம் தேதிக்கு பிறகு ஜெயிலர் 2 படம் திரையிடப்படாது எனவும், இதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் York cinemas கூறியிருக்கிறது.
5/5
படத்தின் ஷோக்கள் நிறுத்தி வைப்பு
இந்த பிரச்சனையை எவ்வளவோ முடிக்க முயற்சி செய்தும், தங்கள் கட்டுப்பாட்டை மீறி அனைத்தும் சென்றதாகவும் இதனால் இறுதி முடிவாக படத்தை திரையிடுவதை நிறுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறது. இதனால், அந்த நாட்டை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் செம அப்செட்டில் இருக்கின்றனர்.