Jana Nayagan OTT Realese: ஜனநாயகன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
Jana Nayagan OTT Realese: ஜனநாயகன் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1/5
ஜனநாயகன்
கோலிவுட் சினிமாவில் பல ஆண்டுகள் ரசிகர்களை கவர்ந்து வந்த முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். ஜனநாயகன் திரைப்படம் எச்.வினோத் இயக்கியுள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாக வேண்டியது. ஆனால், ஜனநாயகன் படத்தில் சென்சார் பிரச்னை காரணமாக, இப்படம் வெளியாகுவதில் சிக்கல்கள் நீடித்தது.
2/5
ஜனநாயகன் வசூல்
பல்வேறு சவால்களுக்கு பிறகு, ஜனநாயன் படம் ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்பதால் பெருமளவில் ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டு படத்தை கண்டு ரசித்தனர். தமிழகம் மட்டுமின்றி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஜனநாயகன் படத்தை ரசிகர்கள் கொண்டானர். ஜனநாயகன் படம் உலகளவில் இதுவரை ரூ.321 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3/5
ஜனநாயகன் விமர்சனம்
ஆனால், ஜனநாயகன் படம் பெரிய அளவில் சூப்பரான படம் என்று சொல்ல முடியாது. முழுக்க முழுக்க விஜய்யின் ரசிகர்களுக்காக இப்படமாக எடுக்கப்பட்டது போன்று இருந்தது. இதனால், விஜய்யின் ஜனநாயகன் படம் கலலையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. ரசிகர்கள் ஜனநாயகன் படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.
4/5
ஜனநாயகன் ஓடிடி
ஜனநாயகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜீ5 தமிழ் தனது எக்ஸ் தளத்தில் ஜனநாயகன் படம் ஓடிடி ரீலிஸ் குறித்த தேதியை வெளியிட்டுள்ளது.
5/5
ஜீ5 தமிழ்
ஜனநாயகன் ஓடிடி ரீலிஸ் தேதியை வீடியோவாக ஜீ5 தமிழ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சோஷியில் மீடியாவில வைரலாகி வருகிறது.