இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களை பெற்ற இந்தியன் 2 திரைப்படத்தின் அடுத்த பாகமான இந்தியன் 3 உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
ஷங்கர் படங்களில், அதிக அளவிளான நெகடிவ் விமர்சனங்களை பெற்ற படமாக இருக்கிறது, இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தின் 3வது பாகம் தற்போது உருவாக இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வாேம்.
1/5
Indian 2
இந்தியன் 2 திரைப்படம், ஷங்கர் இயக்கத்தில் 2024ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பயங்கர மொக்கை வாங்கிய படம் இது. இதில் கமல்ஹாசன் ஹீரோவாகவும், அவருடன் முக்கிய கதாப்பாத்திரங்களில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
2/5
Indian 2 Last 10 Minutes Clip
இந்தியன் 2 திரைப்படத்தின் கடைசி 10 நிமிட காட்சிகள்தான், அதிகளவில் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டதாக இருந்தது. இந்த காட்சி, அடுத்த பாகத்திற்கான ஹிண்ட் ஆக படத்தில் கொடுக்கபட்டிருந்தது.
3/5
Indian 2 movie strong Criticisms
இந்தியன் 2 திரைப்படம், தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இந்த படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகுமா இல்லையா என்கிற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால், அதற்கு தற்போதைய தகவல் பதிலாக வந்துள்ளது.
4/5
Indian 3 movie shooting
இந்தியன் 3 திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இப்படத்தின் பாதி பணிகள் முந்தைய பாகத்தின் பணிகளின் போதே முடிந்து விட்டதை அடுத்து தற்போது மீதம் இருக்கும் வேலைகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5/5
Indian 3 Senpathy Character story
இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடங்க இருப்பதாக கூறப்படுவதை அடுத்து, பல பேர் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்த படம், சேனாபதியின் வாழ்க்கையை மையமாக கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.