• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /கார்த்திகை தீபம்: சென்னையில் இரூந்து மெமு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. நேர அட்டவணை தெரிஞ்சிக்கோங்க!

கார்த்திகை தீபம்: சென்னையில் இரூந்து மெமு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. நேர அட்டவணை தெரிஞ்சிக்கோங்க!

Written ByUmabarkavi K
Published: Nov 20, 2026, 15:54 IST|Updated: Nov 20, 2026, 15:59 IST
joinshare
Karthigai Deepam Special Trains: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் - வேலூர், வேலூர் - விழுப்புரம், திருவண்ணாமலை - விழுப்புரம், தாம்பரம் - திருவண்ணாமலை, கடற்கரை - திருவண்ணாமலை ஆகிய வழித்தடங்களில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

Karthigai Deepam Special Trains: இந்த ரயில்களுக்கான முன்பதிவு உள்ளிட்ட விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

Karthigai Deepam Special Trains1/5

விழுப்புரம் - வேலூர் சிறப்பு ரயில்

விழுப்புரம் - வேலூர் இடையே நவம்பர 22, 23,24ஆம் தேதிகளில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரத்தில் இருநது இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நள்ளிரவு 1.45 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நள்ளிரவு 2 மணிக்கு புறப்பட்டு, காலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் விழுப்புரம், வெங்கடேசபுரம், அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், திருவண்ணாமலை, போளூர், வேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Karthigai Deepam Special Trains2/5

கார்த்திகை தீபம் சிறப்பு ரயில்கள்

தமிழகத்தில் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான ஆன்மீக விழாவாக கார்த்திகை தீபம் உள்ளது. 2026-ஆம் ஆண்டில் திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நவம்பர் 24, 2026 (செவ்வாய்கிழமை) அன்று நடைபெறுகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
Karthigai Deepam Special Trains3/5

கடற்கரை - திருவண்ணாமலை சிறப்பு ரயில்

அதன்படி, கடற்கரை - திருவண்ணாமலை வழித்தடத்தில் நவம்பர் 23,24,25ஆம் தேதிகிளல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மூன்று நாட்களும் காலை 6.20 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு, திருவண்ணாமலைக்கு காலை 11.40 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. இந்த ரயில் பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திருநின்றவூர், திருவள்ளூர், அரக்கோணம், சோழிங்கர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை சென்றடைகிறது. மறுமார்
Karthigai Deepam Special Trains4/5

தாம்பரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்

மேலும், தாம்பரம் - திருவண்ணாமலை வழித்தடத்தில் நவம்பர் 23,24,25ஆம் தேதிகளில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரம் - திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் ரயில், காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 2.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை சென்றடைகிறது.
Karthigai Deepam Special Trains5/5

திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில்

மேலும், திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே நவம்பர் 23 முதல் 25ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.40 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் விழுப்புரத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. இந்த ரயில் திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.
TAGS:
Southern Railway

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.