• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /காவ்யா - அனிருத் Reception: தனித் தனியாக வந்த CM விஜய் - சங்கீதா; திரிஷாவை தேடும் நெட்டிசன்ஸ்

காவ்யா - அனிருத் Reception: தனித் தனியாக வந்த CM விஜய் - சங்கீதா; திரிஷாவை தேடும் நெட்டிசன்ஸ்

Written BySudharsan G
Published: Nov 21, 2026, 22:10 IST|Updated: Nov 22, 2026, 01:37 IST
joinshare
காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு தம்பதிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிலையில், நடிகை திரிஷா திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லையே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். அதில் முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்றிருந்தார். நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளனர்.

Kavya Maran Anirudh Reception1/6

அனிருத் - காவ்யா ரிசப்ஷன்

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா சொகுசு ஹோட்டலில் இன்று (நவ. 21) நடைபெற்றது. குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி, சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Kavya Maran Anirudh Reception2/6

அனிருத் - காவ்யா ரிசப்ஷனில் CM விஜய்

இந்நிகழ்வில் முதலமைச்சர் விஜய்யின் வருகை பெரும் கவனத்தை பெற்றுள்ளது. நடிகராக இருந்தபோது முதல்வர் விஜய்யின் சர்க்கார், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். அதற்கு முன்னர், சுறா, வேட்டைக்காரன் திரைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்திருந்தது. அதேபோல், விஜய் - அனிருத் கூட்டணி கத்தி திரைப்படத்தில் தொடங்கி, மாஸ்டர், பீஸ்ட், லியோ, ஜனநாயகன் வரை தொடர்ந்தது.
Kavya Maran Anirudh Reception3/6

தம்பதிகளை வாழ்த்திய முதல்வர் விஜய்

காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு தம்பதிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவருடன் அமைச்சர் என். ஆனந்த், விஜய்யின் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, உதவியாளர் ஜெகதீஷ் பழனிசாமி உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.
Kavya Maran Anirudh Reception4/6

திரிஷாவை தேடும் நெட்டிசன்கள்

இருப்பினும் முதலமைச்சர் விஜய்யுடன் அவரது தோழியும் நடிகையுமான திரிஷா வரவில்லையே என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த நவம்பர் 5ஆம் தேதி சென்னை லீலா பேலஸ் விடுதியில் நடைபெற்ற ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகள் ஸ்ரேயாவின் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தோழியும் நடிகையுமான திரிஷா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். ஒய்.எஸ். அனில் ரெட்டி, ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஆவார்.
Kavya Maran Anirudh Reception5/6

ஏஜிஎஸ் திருமணத்தில்...

அதேபோல், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஏஜிஎஸ் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.சுரேஷ் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக விஜய் - திரிஷா ஆகியோர் ஒரே காரில் வந்து கலந்துகொண்டனர். அப்படியிருக்க, முதலமைச்சர் விஜய் கலந்துகொண்ட காவ்யா - அனிருத் திருமண வரவேற்பில் முதலமைச்சர் விஜய்யுடன், திரிஷா ஏன் வரவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Kavya Maran Anirudh Reception6/6

திருமண வரவேற்புக்கு வந்த சங்கீதா

அதேநேரத்தில் முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் திருமண வரவேற்பு நிகழ்வுக்கு வருகை தந்து, தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் அவர் முதலமைச்சர் விஜய்யுடன் வருகை தரவில்லை. கடந்தாண்டு விஜய்யுடன் விவகாரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், பின்னர் அந்த மனுவை வாபஸ் பெற்றதாக கூறப்பட்டது. முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் தனியாக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.