Kovai Kutralam: மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக,கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
1/5
கோவை குற்றாலம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
2/5
கோவை குற்றாலம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இரவு முதல் கனமழை பெய்து வருவதால், கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீர்வரத்து திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அபாயம் நிலவுகிறது.
3/5
கோவை குற்றாலம்
இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
4/5
கோவை குற்றாலம்
மறுஅறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் கோவை குற்றாலம் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
5/5
கோவை குற்றாலம்
மேலும், கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.