• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ஆயுள் சான்றிதழ்: நவம்பர் 30-க்குள் இதை சமர்ப்பிக்கவில்லை என்றால் ஓய்வூதியம் கிடைக்காது!!

ஆயுள் சான்றிதழ்: நவம்பர் 30-க்குள் இதை சமர்ப்பிக்கவில்லை என்றால் ஓய்வூதியம் கிடைக்காது!!

Written BySripriya Sambathkumar
Published: Nov 09, 2026, 04:30 PM IST|Updated: Nov 09, 2026, 04:38 PM IST
joinshare
Life Certificate: ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் ஓய்வூதியம் பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடும்.

Life Certificate: ஓய்வூதியதாரர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதையும், அவர் தனது ஓய்வூதியப் பலன்களைப் பெறத் தகுதியுடையவர் என்பதையும் உறுதிப்படுத்த, வங்கிகளும் ஓய்வூதிய நிர்வாகிகளும் இந்தச் சான்றிதழை ஆண்டுதோறும் வழங்குகின்றன. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் இதைச் சமர்ப்பிக்கத் தவறினால், பணம் வழங்குவதில் தாமதம் அல்லது நிறுத்தம் ஏற்படலாம்.

Jeevan Pramaan1/8

ஜீவன் பிரமாண்

ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஓய்வூதியம் பெரிய நிதி ஆதாரமாக விளங்குகிறது. ஆகையால், ஓய்வூதியம் தொடர்பான எந்தவொரு முக்கியக் காலக்கெடுவையும் தவறவிடுவது கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
Life Certificate2/8

ஆயுள் சான்றிதழ்

ஜீவன் பிரமாண் பத்திரம் என்றும் அழைக்கப்படும் வருடாந்திர ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30, 2026 ஆகும். 80 வயதை எட்டிய ஓய்வூதியதாரர்கள் அக்டோபர் 1 முதல் இதைச் சமர்ப்பிக்கத் தொடங்கலாம், மற்றவர்கள் நவம்பர் 1 முதல் தொடங்கலாம்.
Importance of Life Certificate3/8

ஆயுள் சான்றிதழின் முக்கியத்துவம்

ஓய்வூதியதாரர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதையும், அவர் தனது ஓய்வூதியப் பலன்களைப் பெறத் தகுதியுடையவர் என்பதையும் உறுதிப்படுத்த, வங்கிகளும் ஓய்வூதிய நிர்வாகிகளும் இந்தச் சான்றிதழை ஆண்டுதோறும் வழங்குகின்றன. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் இதைச் சமர்ப்பிக்கத் தவறினால், பணம் வழங்குவதில் தாமதம் அல்லது நிறுத்தம் ஏற்படலாம்.
How to Submit Jeevan Pramaan from home4/8

வீட்டிலிருந்து ஜீவன் பிரமாண் பத்திரத்தைச் சமர்ப்பிப்பது எப்படி?

ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இனி வங்கிகளில் நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டியதில்லை. ஆதார் முக அங்கீகாரத்தின் மூலம் அவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். செயல்முறை பின்வருமாறு: முதலில் இணக்கமான ஆண்ட்ராய்டு சாதனத்தில் ஜீவன் பிரமாண் மற்றும் ஆதார் ஃபேஸ் RD செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும். ஆதார் எண், கைபேசி எண் மற்றும் பிற விவரங்களை வழங்கவும். PPO எண், வங்கிக் கணக்கு எண் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரம் போன்ற ஓய்வூதிய விவரங்களை வழங்கவும்.
How to Submit Jeevan Pramaan from home5/8

வீட்டிலிருந்து ஜீவன் பிரமாண் பத்திரத்தைச் சமர்ப்பிப்பது எப்படி?

அதன் பிறகு ஆதார் முக அங்கீகாரச் செயல்முறையைப் பின்பற்றவும். சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கப்படும். SMS மூலம் பெறப்பட்ட பிரமாண் ஐடியை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
Life Certificate from CSC6/8

CSC-யில் ஆயுள் சான்றிதழைப் பெறுங்கள்

ஆன்லைனில் ஆயுள் சான்றிதழ் பெறுவது கடினமாக உள்ளவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஓய்வூதியதாரர்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு தங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC) அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைக்குச் செல்லலாம். தகுதியுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமான வீட்டு வாசலிலேயே சேவைகளும் கிடைக்கின்றன.
Life Certificate Last Date7/8

ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க கடைசி நாள்

ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30 ஆகும். சமர்ப்பித்தவுடன், சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த அதன் நிலையை ஆன்லைனில் சரிபார்க்கவும். ஒப்புகைக் கடிதத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
Life Certificate8/8

வாழ்க்கைச் சான்றிதழ்

ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான இந்த வருடாந்திர செயல்முறையை நிறைவு செய்ய சில நிமிடங்களே ஆகும். ஆனால், இதை செய்யத் தவறினால், ஓய்வூதிய முடக்கம், தேவையற்ற அலைச்சல், மன அழுத்தம் போன்ற பல இன்னல்களை சந்திகக் நேரிடும். ஆகையால், ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 30-ஆம் தேதிக்கு முன்னர் தங்கள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பித்து, ஓய்வூதியம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது நல்லது.
TAGS:
Pension

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.