• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

இந்தியாவில் திருமணம் செய்யாதவர்கள், வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 13, 2026, 06:04 PM IST|Updated: Nov 13, 2026, 06:12 PM IST
joinshare
Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..
Image Credit: Supreme Court | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2003ஆம் ஆண்டில், இந்து மத சம்பிரதாயங்களின்படி திருமணம் செய்த ஒரு தம்பதியினர், பின்னர் வெளிநாட்டிற்கு குடியேறினர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிய நினைத்த போது, அங்குதான் ஒரு சட்ட சிக்கல் உருவானது. அந்த சட்ட சிக்கல் என்ன? இதோ முழு விவரம்!

விவாகரத்தில் எழுந்த சிக்கல்..!

ஆந்திராவை சேர்ந்த அந்த தம்பதியினர், தங்கள் சொந்த ஊரில் இந்து மத சம்பிரதாயங்களின் படி, ஒரு தம்பதியினர் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியினர் பிரிட்டனில் குடியேறினர். இவர்கள் திருமண வாழ்க்கையில் சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த 2007ஆம் ஆண்டு, தம்பதிகளில் மனைவி மட்டும் ஆந்திராவிற்கு திரும்பினார். பின்னர், ஆந்திர நீதிமன்றத்தில் விவாகரத்து பெற, கணவன் மனைவி இருவரும் முயற்சித்தனர். ஆனால் இவர்களின் முயற்சி வீனாக போயுள்ளது.

வேறு ஒருவருடன் திருமணம்..!

கணவர், பிரிட்டனில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு, 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றிருக்கிறார். இதை அடிப்படையாக வைத்துதான், இவர் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றுள்ளார். இதையடுத்து, பிரிட்டனிலேயே 2ஆவதாக வேறு ஒருவரையும் திருமணம் செய்துள்ளார்.

போலீசில் புகார்..

இன்னொருவரை தன் கணவர் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக, ஆந்திர போலீஸில் மனைவி புகார் அளித்திருக்கிறார். இதன் அடிப்படையில், கணவர், அவருடைய பெற்றொர் மற்றும் 2வது மனைவி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கினை ரத்து செய்யக்கோரி, கணவர் தரப்பிலிருந்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் கூறியது என்ன?

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்திர சேகர் அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. இதில் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளனர்.

இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், வெளிநாட்டு நீதிமன்றங்களில் விவாகரத்து பெற முடியாது என்று திட்டவட்டமாக கூறினர். பின்பு, ஒருவேளை வெளிநாட்டில் விவாகரத்து பெற்றாலும் இந்திய சட்டப்படி முதல் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படாது என்றும் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் விவாகரத்து பெற்று, 2வதாக திருமணம் செய்து கொண்டால், இந்திய சட்டப்படி குற்றமாகவே கருதப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டு குடியுரிமையையே பெற்றிருந்தாலும், இந்திய சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று என கூறியுள்ளனர்.

இருப்பினும், தற்போதைய வழக்கில் கணவருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை மட்டும் தொடரலாம் என கூறியிருக்கும் இவர்கள், அவருடைய பெற்றோர் 2வது மனைவி மீதான குற்றவியல் நடவடிக்கையையும் ரத்து செய்கிறோம் என தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் படிக்க | கடும் கோபத்தில் சீக்கியர்கள்.. சோனியா காந்தியின் புத்தகம் எரிப்பு.. நடந்தது என்ன?

இந்திய திருமண சட்டம் சொல்வது என்ன?

  • இந்திய திருமண சட்டம் 1995 Hindu Marriage Act ஆனது, இந்தியாவில் உள்ள இந்துக்கள், சமணர்கள், புத்த மதத்தினர், மற்றும் சீக்கியர்கள் ஆகியோருக்கு பொருந்தும். ஆனால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சி மதத்தினருக்கு இது பொருந்தாது.
  • இதில் முக்கிய நிபந்தனைகள் சில, பிரிவு 5ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன:
  • திருமணத்தின் போது இருவருக்கும் உயிருடன் வேறு வாழ்க்கை துணை இருக்க கூடாது.
  • இரு தரப்பினருக்கும் மனநல தெளிவு மற்றும் செல்லத்தக்க சம்மதம் இருக்க வேண்டும். அதாவது மனபிறழ்வு, மனநோய் போன்றவை இருக்க கூடாது.
  • திருமண வயது, ஆணுக்கு 21 ஆகவும், பெண்ணிற்கு 18ஆகவும் இருக்க வேண்டும்.
  • இருவர் சட்டப்படி நெருங்கிய உறவினர்கள் வரம்பிற்குள் வரக்கூடாது.

வெளிநாட்டு விவாகரத்து இந்தியாவில் ஏன் செல்லாது?

இந்தியாவில், இந்து மத சம்பிரதாயங்களின் படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், பின்னர் வெளிநட்டில் வசித்து வந்தாலும், அவர்களின் திருமண உறவு இந்திய சட்டத்தின் கீழ் தொடர்ந்து செல்லுபடியாகும். எனவே, வெளிநாட்டு நீதிமன்றத்தில் பெறப்படும் விவாகரத்து உத்தரவு, இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகி விடாது.

வெளிநாட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்திய நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ள ஒரு சில சட்ட நிபந்தனைகளும் இருக்கின்றன. குறிப்பாக, அந்த வெளிநாட்டு நீதிமன்றத்திற்கு அந்த வழக்கை விசாரிக்கும் உரிய அதிகாரம் இருந்ததா? இந்திய திருமண சட்டத்திற்கு முரணான வகையில் தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதா? வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டதா? என்பது போன்ற அம்சங்கள் பரிசீலிக்கப்படும்.

இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட ஒருவர், வெளிநாட்டிற்கு சென்று அங்கு வசிப்பதனால் மட்டும் அவர் அந்த நாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுவிட்டால், இந்த விவாகரத்து இந்தியாவில் கட்டாயம் செல்லும் என சொல்லிவிட முடியாது. இந்திய சட்டத்தின் அடிப்படையில், இந்த விவாகரத்து தீர்ப்பு அங்கீகரிக்கப்பட வேண்டிய சூழலும் இருக்க வேண்டும்.

இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுவது ஏன்?

இந்த வழக்கு, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு பின்னர் வெளிநாட்டில் குடியேறும் அனைத்து தம்பதியினருக்கும் முக்கியமான சட்ட பாடமாக பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டில் விவாகரத்து பெற்றுவிட்டோம் எனும் காரணத்தால் மட்டுமே, இந்தியாவில் நடைபெற்ற முதல் திருமணம் முடிந்து விட்டதாக கருத முடியாது. குறிப்பாக, முதல் திருமணம், சட்டப்படி முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே, 2வது திருமணம் செய்துகொண்டால், பின்னர் இந்தியாவில் குற்றவியல் மற்றும் சிவில் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

மேலும் படிக்க | UG படிக்க ரூ.50,000 உதவித்தொகை.. தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு.. யாரெல்லாம் பெறலாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
India