• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /10 ஐபிஎல் அணிகள்... கழட்டிவிடப்படும் வீரர்கள் யார் யார்? புட்டுபுட்டு வைக்கும் புஜாரா

10 ஐபிஎல் அணிகள்... கழட்டிவிடப்படும் வீரர்கள் யார் யார்? புட்டுபுட்டு வைக்கும் புஜாரா

Written BySudharsan G
Published: Nov 08, 2026, 02:49 PM IST|Updated: Nov 08, 2026, 02:53 PM IST
joinshare
10 ஐபிஎல் அணிகளும் மினி ஏலத்திற்கு யார் யாரை விடுவிக்கும் என இந்திய மூத்த வீரர் செதேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். ஆர்சிபி யாரையுமே விடுவிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் அதிக தொகையுடன் ஐபிஎல் மினி ஏலத்தில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பெரிய பெரிய வீரர்களை அணிகள் ரிலீஸ் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

IPL Mini Auction1/6

நவம்பர் 17 கடைசி நாள்

ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வரும் நவ. 17ஆம் தேதிக்குள் பிசிசிஐயிடம் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் ஒரு வாரத்திற்குள் எந்தெந்த வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்திற்கு விடுவிக்கப்படுவார்கள் என்பது தெரிந்துவிடும்.
IPL Mini Auction2/6

ஐபிஎல் முக்கிய டிரேட்

அதேநேரத்தில் தற்போது பல்வேறு டிரேட் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டிரேட் செய்யப்பட இருக்கின்றனர்.
IPL Mini Auction3/6

கேகேஆர் விடுவிக்கும் வீரர் யார்?

இந்த பரபரப்பா்ன சூழலில், ஒரு பெரிய தொகை கொண்ட வீரர் ஐபிஎல் ஏலத்தில் விடுவிக்கப்படுவார் என இந்திய மூத்த வீரர் செதேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.25.20 கோடி கொடுத்து எடுத்த கேம்ரூன் கிரீனை விடுவிக்கும் என தெரிவித்துள்ளார். அவர்கள் மீண்டும் குறைந்த தொகையில் அவரை ஏலத்தில் எடுக்கவும் வாய்ப்புள்ளது என்றார்.
IPL Mini Auction4/6

சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி லிஸ்ட்

அதேபோல், சிஎஸ்கே அணி மேட் ஹென்றி மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோரில் ஒருவரை விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்படுவார் என அவர் தெரிவித்தார். ஆர்சிபி அணி யாரையும் விடுவிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
IPL Mini Auction5/6

குஜராத் , பஞ்சாப், எஸ்ஆர்ஹெச்

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ராகுல் தெவாட்டியா அல்லது ஷாருக் கான் ஆகியோரில் ஒருவர் விடுவிக்கப்படலாம் என புஜாரா தெரிவித்தார். இருவருமே எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை என்றும் கூறினார். பஞ்சாப் அணி சேவியர் பார்ட்லட், லாக்கி பெர்குசன் ஆகியோரில் ஒருவரையும், ஹைதராபாத் ஜெயதேவ் உனத்கட் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரில் ஒருவரையும் விடுவிக்க வாய்ப்புள்ளதாக புஜாரா தெரிவித்தார்.
IPL Mini Auction6/6

டெல்லி, லக்னோ, ராஜஸ்தான்

டெல்லி அணி பிருத்வி ஷா அல்லது கருண் நாயர் ஆகியோரில் ஒருவரை விடுவிக்க வாய்ப்புள்ளதாக புஜாரா தெரிவித்தார். லக்னோ அணி நிக்கோலஸ் பூரனை விடுவிக்கலாம். அவர் ரூ.21 கோடி மதிப்பு வாய்ந்த வீரர் என்றாலும் அவரை விடுவிக்க வாய்ப்புள்ளது என்றார். ஒருவேளை பூரன் அணியில் இருந்தால் ஆயுஷ் பதோனியை லக்னோ விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் யாரை விடுவிக்கும் என தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
TAGS:
IPL

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டெல்டா, தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

டெல்டா, தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

2

பும்ராவுக்கு பேக்கப் குர்னூர் பிரார்.. ”கம்பீர் இவரை விரும்புவதற்கு இதுதான் காரணம்”!

3

ரூ.7,000 கோடி பட்டாசு விற்பனை... அடுத்தாண்டு ரூ.10 ஆயிரம் கோடி டார்கெட் - மகிழ்ச்சியில் சிவகாசி

4

பெரியார் அறிவுலக சர்ச்சை: 8 கேள்விகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்!

5

உயிரிழந்த பிறகு தேர்தலில் வெற்றி... 3 மாத குழந்தையின் தாய் மரணம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.