• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /உயிரிழந்த பிறகு தேர்தலில் வெற்றி... 3 மாத குழந்தையின் தாய் மரணம்

உயிரிழந்த பிறகு தேர்தலில் வெற்றி... 3 மாத குழந்தையின் தாய் மரணம்

ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் ஜனசேனா கட்சி வேட்பாளர் காரபட்டி திவ்யா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Written BySudharsan G
Published: Nov 08, 2026, 12:04 PM IST|Updated: Nov 08, 2026, 12:14 PM IST
joinshare
உயிரிழந்த பிறகு தேர்தலில் வெற்றி... 3 மாத குழந்தையின் தாய் மரணம்
Image Credit: Janasena Woman Candidate Divya Death | Image Source: X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
உயிரிழந்த பிறகு தேர்தலில் வெற்றி... 3 மாத குழந்தையின் தாய் மரணம்

உயிரிழந்த பிறகு தேர்தலில் வெற்றி... 3 மாத குழந்தையின் தாய் மரணம்

2

மதுரையில் 52 ஆயிரம் போதை மாத்திரைகள்... 2 பேர் கைது - சிக்கியது எப்படி?

3

கையில் பிடித்து... வானில் சென்று வெடிக்கும் பட்டாசு... தமிழ்நாடு அரசு முக்கிய அட்வைஸ்

4

CSK ரசிகர்களே... தீபாவளிக்கு வந்த குட் நியூஸ்... அக்சர் படேல் போட்ட இன்ஸ்டா பதிவு வைரல்

5

தீபாவளிக்கு மழை பெய்வது நன்மையா...? டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் விளக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே பெண் வேட்பாளர் உயிரிழந்த நிலையில், தற்போது அவர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகரும், ஆந்திராவின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட 28 வயதான பெண் வேட்பாளர், வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் மாரடைப்பால் காலமானார். அவர் 350 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்பான்மையுடன் வெற்றி கிடைத்துள்ளது.

மேலும் படிக்க |  டெல்லியில் ரூ.15 கோடி சொகுசு வீடுகள் ஏலம் ரத்து.. NBCC நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

யார் அந்த பெண் வேட்பாளர்?

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவாரப்பள்ளி மண்டலத்தில் உள்ள துமந்துனிகுடெம் கிராமத்தைச் சேர்ந்தவர் காரபட்டி திவ்யா. 28 வயதான இவர் ஜனசேனா கட்சியின் சார்பில் மண்டல பரிஷத் பிராந்திய தொகுதி உறுப்பினர் பதவிக்கு தேர்தல் பதவிக்குப் போட்டியிட்டார்.

திவ்யா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடும் பிரச்சாரத்தை மேர்கொண்டு வந்தார். நவம்பர் 5ஆம் தேதி (வெள்ளி) நடந்த தேர்தல் வாக்குப்பதிவு பணிகளிலும் தீவிரமாக இயங்கினார்.

திவ்யாவுக்கு நடந்தது என்ன?

இதையடுத்து, தேர்தலில் வாக்களித்த சில மணி நேரங்களிலேயே திவ்யாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் அவரை தேவாரப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு வயிற்றுப் பிரச்னை இருப்பதாக கூறி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருப்பினும் உடல்நிலையில் அவருக்கு எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக ராஜமுந்திரியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின.

மேலும் படிக்க |  டோல்கேட்களில் இனி நிற்க வேண்டாம்.. NHAI-ன் புதிய MLFF சுங்கக் கட்டண விதிமுறைகள்!

உயிரிழந்ததற்கு அடுத்த நாள் வெற்றி...

திவ்யா உயிரிழந்த அடுத்த நாளே அதாவது நேற்று (நவ. 7) ஆந்திர பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது துமந்துனிகுடெம் MPTC தொகுதியில் ஜனசேனா வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தனது நெருங்கிய போட்டியாளரை விட சுமார் 350 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வெற்றியடைந்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வெற்றிக்காக உழைத்த திவ்யா, வெற்றியைப் பார்க்கக்கூட உயிருடன் இல்லை என்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிலைகுலைந்துள்ள திவ்யாவின் குடும்பம்

திவ்யாவுக்கு ஸ்ரீனிவாஸ் என்ற கணவரும், 5 வயது மற்றும் 3 மாதங்களே ஆன இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இளம் வயதிலேயே அவரது மரணம் அவரின் குடும்பத்தையே நிலைகுலையச் செய்திருக்கிறது.

தேர்தலில் வென்றிருக்கும் சூழலில் அந்த மகிழ்ச்சியை கொண்டாட வேண்டிய வேளையில், திவ்யாவின் மறைவால் அவர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது மறைவுக்கு ஜனசேனா கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க |  அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Election