• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /பும்ராவுக்கு பேக்கப் குர்னூர் பிரார்.. ”கம்பீர் இவரை விரும்புவதற்கு இதுதான் காரணம்”!

பும்ராவுக்கு பேக்கப் குர்னூர் பிரார்.. ”கம்பீர் இவரை விரும்புவதற்கு இதுதான் காரணம்”!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய குர்னூர் பிராரின் ஆக்ரோஷமான பந்துவீச்சை முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்திக் பாராட்டியதுடன், 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் முக்கிய வீரராக உருவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Written ByR Balaji
Published: Nov 08, 2026, 02:55 PM IST|Updated: Nov 08, 2026, 02:57 PM IST
joinshare
பும்ராவுக்கு பேக்கப் குர்னூர் பிரார்.. ”கம்பீர் இவரை விரும்புவதற்கு இதுதான் காரணம்”!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டெல்டா, தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

டெல்டா, தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

2

பும்ராவுக்கு பேக்கப் குர்னூர் பிரார்.. ”கம்பீர் இவரை விரும்புவதற்கு இதுதான் காரணம்”!

3

ரூ.7,000 கோடி பட்டாசு விற்பனை... அடுத்தாண்டு ரூ.10 ஆயிரம் கோடி டார்கெட் - மகிழ்ச்சியில் சிவகாசி

4

பெரியார் அறிவுலக சர்ச்சை: 8 கேள்விகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்!

5

உயிரிழந்த பிறகு தேர்தலில் வெற்றி... 3 மாத குழந்தையின் தாய் மரணம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குர்னூர் பிரார் சிறப்பாக செயல்பட்டு கவனம் ஈர்த்துள்ளார். இந்த நிலையில், 2 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவரை, முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்திக் பாராட்டியுள்ளார்.

நியூசிலாந்து தொடரில் அசத்தும் குர்னூர் பிரார்

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையே இடம் பிடிப்பதற்கான போட்டி அதிகரித்துள்ளது. இந்த சூழலில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான குர்னூர் பிரார் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். தொடரின் முதல் 2 போட்டிகளில் மொத்தம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

குறிப்பாக, 2வது ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் நம்பிக்கைக்குரிய வீரராக அவர் உருவெடுத்துள்ளார். இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குர்னூர் பிரார், மொத்தம் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லாத சூழலில், இந்தியாவின் வேகப்பந்து வீச்சுக்கு வலுசேர்க்கும் வீரராக அவர் பார்க்கப்படுகிறார்.

கவுதம் கம்பீர் விரும்புவதற்கு இதுதான் காரணம்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் குர்னூர் பிரார் வெளிப்படுத்திய பந்துவீச்சை முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்திக் பாராட்டியுள்ளார்.

கிரிக்பஸில் பேசிய அவர், குர்னூர் பிராரின் பந்துவீச்சில் இருக்கும் ஆக்ரோஷம் இந்திய அணிக்கு மிகவும் தேவையான ஒன்று என்றும், இதுவே தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவரை விரும்புவதற்கான காரணங்களில் ஒன்று என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முரளி கார்த்திக் கூறுகையில், "குர்னூர் பிரார் பந்துவீச்சில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்தை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அணிக்கு இதுபோன்ற ஒரு வீரர் தேவை. கவுதம் கம்பீர் அவரை விரும்புவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

அவர் அதிக வேகத்துடன் பந்துவீசுகிறார். பேட்ஸ்மேன்களின் உடலை நோக்கி பந்துகளை வீசி அச்சுறுத்துகிறார். வெளிநாட்டு வீரர்களுக்கும் இதே நிலைதான். இன்றைய போட்டியில் அவர் பல பேட்ஸ்மேன்களை தாக்கியதை பார்க்க முடிந்தது" என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு கிடைத்துள்ள சாதகமான அறிகுறி

இந்திய அணியில் தற்போது அனுபவம் வாய்ந்த வீரர்களான குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அதே நேரத்தில், ஜஸ்பிரித் பும்ரா இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. மேலும், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரும் அணியில் இல்லாத நிலையில், நியூசிலாந்து மண்ணில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சை அர்ஷ்தீப் சிங் மற்றும் குர்னூர் பிரார் வழிநடத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழலில், குர்னூர் பிரார் சிறப்பாக செயல்படுவது இந்திய அணிக்கு சாதகமான அறிகுறி என முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்திய மைதானங்களில் பந்துவீச்சாளர்களுக்கு சவால்

இந்தியாவில் அறிமுகமான காலம் முதல் குர்னூர் பிரார் மற்றும் அவுகிப் நபி போன்ற வீரர்கள் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடி வந்துள்ளனர். இதனால், பந்துவீச்சாளர்களுக்கு அதிக சவால்கள் ஏற்பட்டதாக முரளி கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அவுகிப் நபி மற்றும் குர்னூர் பிரார் போன்ற வீரர்கள் அறிமுகமானதிலிருந்து மிகவும் சாதகமான, பேட்ஸ்மேன்களுக்கு உதவும் ஆடுகளங்களில் விளையாடி வந்துள்ளனர். அவர்களுக்காக வருத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

விளையாட்டில் பங்கேற்பது என்பது சவால்களை எதிர்கொண்டு மகிழ்வதற்காகத்தான். ஆனால், சில நேரங்களில் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமான சூழல் உருவாகிறது. கமெண்டரி பெட்டியில் அமர்ந்திருக்கும் போது கூட சில நேரங்களில் பந்துவீச்சாளர்களின் நிலையை நினைத்து வருத்தமாக இருக்கும். இப்போது அவர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

அவுகிப் நபிக்கும் கிடைத்த முதல் விக்கெட்டுகள்!

இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அவுகிப் நபியும் நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணிக்காக தனது முதல் 2 ஒருநாள் போட்டிகளில் விக்கெட் எதையும் கைப்பற்றாத அவர், 2வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது கணக்கை தொடங்கினார். இதனால், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது.

குர்னூர் பிரார் மற்றும் அவுகிப் நபி ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால், 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தேர்வில் அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket