Thiruvarur Local Holiday: அக்டோபர் 22ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Thiruvarur Local Holiday: அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
1/5
திருவாரூர் உள்ளூர் விடுமுறை
2026-27ஆம் கல்வியாண்டு நடந்து வருகிறது. மாணவர்களுக்கு தற்போது தான் காலாண்டு தேர்வு முடிந்து, இரண்டாம் பருவம் தொடங்கியுள்ளது. இதற்கிடையில், ஏற்கனவே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த மாதம் ஏகப்பட்ட விடுமுறை நாட்கள் உள்ளன. இதனால், மாணவர்கள் குஷியில் இருக்கின்றனர். இந்த நிலையில் தான், அக்டோபர் 22ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2/5
முத்துப்பேட்டையில் தர்கா கந்தூரி விழா
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஜாம்புவானோடை தர்கா கந்தூரி விழா நடைபெற உள்ளது. இதனை காண திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பலரும் வருகை தருவார்கள். இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் அக்டாபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3/5
தர்கா கந்தூரி விழா முன்னிட்டு, அக்டோபர் 22 விடுமுறை
இந்த விழாவினை முன்னிட்டு அக்டோபர் 22ஆம் தேதி வியாழன் கிழமை திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக அக்டோபர் 24ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
4/5
அரசு அலுவலங்களுக்கு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்
திருவாரூர் மாவட்டத்திற்கு முத்துப்பேட்டை தர்கா விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை செலவானி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-ன் படி அறிவிக்கப்படவில்லை. இதனால், அக்டோபர் 22ஆம் தேதி அன்று திருவாரூர் மாவட்டத்தில் தலைமைக் கருவூலம், கிளைக் கருவூலங்களை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5/5
மற்ற மாவட்டங்களுக்கும் விடுமுறையா?
எனவே, அக்டோபர் 22ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.