Nagapattinam Local Holiday: நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நவம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 20 வெள்ளிக்கிழமை, நவம்பர் 21 சனிக்கிழமை, நவம்பர் 23ஆம் தேதி ஞாயிற்று கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
Nagapattinam Local Holiday: நாகூர் கந்தூரில் விழாவை முன்னிட்டு, நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1/5
நாகையில் நவம்பர் 20ம் தேதி உள்ளூர் விடுமுறை
2026-27ஆம் கல்வியாண்டு நடந்து வருகிறது. பள்ளி மாணவர்கள் தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு, பள்ளிகளுக்கு கடந்த நவம்பர் 10ஆம் தேதி முதல் வர தொடங்கியுள்ளனர். மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நவம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2/5
நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழா
உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 470வது ஆண்டு கந்தூரி விழா நவம்பர் 10ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நவம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 23ஆம் தேதி வரை 14 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நவம்பர் 19ஆம் தேதி அன்று இரவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, நவம்பர் 20ஆம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது.
3/5
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை?
நாகூர் ஆண்டவருக்கு சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, நவம்பர் 20ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு என பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
4/5
டிசம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், டிசம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
5/5
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
மேற்கண்ட உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act. 1881)- என்பதால் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அம்மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடுகளை செய்யுமாறும் நாகை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.