மதுரை மாவட்டத்தில் இந்த நவம்பர் மாதத்தில் புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. மதுரையில் புத்தகத் திருவிழா எத்தனை நாட்கள், எங்கு, எப்போது நடைபெறும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். 2026ஆம் ஆண்டிலும் அதே இடத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இந்தாண்டு புத்தகத் திருவிழா குறித்து விரிவாக இந்த புகைப்படத்தொகுப்பில் பார்க்கலாம்.
1/5
மதுரை புத்தகத் திருவிழா
மதுரையில் 200க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், இளைஞர்கள் - மாணவர்கள் - சிறுவர்கள் - குழந்தைகளுக்கான புத்தகங்கள், சிறப்பு அரங்குகள் உடன் மதுரை புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. இதில் தினமும் சிறப்பு ஆளுமைகளும் உரையாற்ற இருக்கிறார்கள்.
2/5
எத்தனை நாட்களுக்கு...? எப்போது...?
வரும் நவம்பர் 13 (வெள்ளி) முதல் நவம்பர் 23 (திங்கள்) வரை புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. 11 நாட்களும் இந்த மதுரை புத்தகத் திருவிழா காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெறும்.
3/5
எங்கு புத்தக திருவிழா...?
தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில்தான் இந்தாண்டும் புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. பெரியார் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து எளிதாக அரசு பேருந்துகள் மூலமாக எளிமையாக தமுக்கத்திற்கு வர முடியும்.
4/5
10% தள்ளுபடி
மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து இந்த மதுரை புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. இங்கு ஒவ்வொரு புத்தகத்திற்கும் 10% தள்ளுபடி கிடைக்கும்.
5/5
குடும்பத்துடன் பங்கேற்க அழைப்பு
'அனைவரும் வாசிப்போம் அறிவை வளர்ப்போம்' என்ற நோக்கத்துடன் மாணவர்கள், குழந்தைகள் மற்றும் புத்தக வாசிப்பை விரும்பும் வாசகர்கள் அனைவரும் குடும்பத்தோடு மதுரை புத்தகத் திருவிழாவில் பங்கேற்குமாறு மாவட்ட நிர்வாகத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.