மதுரை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்துவரி செலுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரத்தை இங்கு காணலாம்.
சொத்துவரியை உரிய காலக்கெடுவுக்குள் செலுத்துவதன் மூலம் அபராதத்தொகையை தவிர்க்கலாம். மேலும், தற்போது குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் சொத்து வரி செலுத்தினால் தள்ளுபடி கிடைக்கும். இந்த புகைப்படத்தொகுப்பில் இதுகுறித்து விரிவாக அறியலாம்.
1/5
மதுரை மாநகராட்சி அறிவிப்பு
2026-27ஆம் ஆண்டுக்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு மதுரை மாநகராட்சி சிறப்பு சலுகையை அளிப்பதாக அறிவித்துள்ளது.
2/5
சிறப்பு தள்ளுபடி எவ்வளவு?
அதன்படி, வரும் அக். 31ஆம் தேதிக்குள் 2026-27 ஆண்டுக்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை செலுத்துபவர்களுக்கு 5% சிறப்பு சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/5
அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்
அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை இச்சலுகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த அரிய பயன்படுத்தி, காலக்கெடுவிற்குள் தங்களின் சொத்துவரியைச் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
4/5
ஆன்லைனிலும் சொத்துவரி செலுத்தலாம்
சொத்துவரியை செலுத்த www.tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் ஆன்லைனில் சொத்துவரியைச் செலுத்தலாம். காலக்கெடுவைத் தவறவிடாதீர்கள். 5 சதவீத சிறப்புச் சலுகையைப் பெற்றுப் பயன்பெறுங்கள்.
5/5
சொத்து வரி செலுத்துவதன் பயன்
சாலை வசதி, தெரு விளக்குகள், கழிவுநீர் மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகளுக்கு இந்த சொத்து வரிதான் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சொத்து வரி செலுத்திப் பெறப்படும் ரசீது, எதிர்காலத்தில் வீட்டை விற்பனை செய்யும்போதோ, வங்கிக் கடன் வாங்கும்போதோ அல்லது பெயர் மாற்றம் செய்யும்போதோ மிக முக்கியமான சட்டப்பூர்வ உரிமை ஆவணமாக பயன்படுகிறது.