• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /மதுரை டூ குருவாயூர் விஸ்டாடோம் ரயில்.. கட்டணம் எவ்வளவு? முழு விவரம்

மதுரை டூ குருவாயூர் விஸ்டாடோம் ரயில்.. கட்டணம் எவ்வளவு? முழு விவரம்

Written ByUmabarkavi K
Published: Oct 19, 2026, 04:30 PM IST|Updated: Oct 19, 2026, 04:37 PM IST
joinshare
Madurai Guruvayur Vistadome Train: மதுரை - குருவாயூர் விரைவு ரயிலில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி முதல் விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, இந்த ரயில் சேவைக்கான கட்டணம் விவரம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Madurai Guruvayur Vistadome Train: இந்த ரயிலில் இயற்கை அழகை ரசித்தபடி பயணம் மேற்கொள்ளும் வகையில், மேற்கூரையில் கண்ணாடி வசதி செய்யப்பட்டுள்ளது.
 

Vistadome Train1/5

மதுரை - குருவாயூர் விஸ்டடோம் ரயில்

தமிழகத்தில் முதல்முறையாக விரைவு ரயிலில் விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, மதுரை - குருவாயூர் விரைவு ரயிலில் விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை அக்டோபர் 22ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அன்றைய தினம் முதல் மதுரையில் இருந்து குருவாயூர், குருவாயூரில் இருந்து மதுரைக்கும் என இருமார்க்கத்திலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Vistadome Train2/5

இயற்கை எழிலை ரசித்தபடி பயணிக்கலாம்

மதுரை - குருவாயூர் விரைவு ரயிலில் கண்ணாடி கூரை சொகுசுப் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கேரளாவின் பசுமையான இயற்கை எழிலை ரசித்தபடி பயணிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும். தற்போது வந்தே பாரத் ரயில்களில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், மேற்கூரை வழக்கம்போல் இருக்கும். ஆனால், மதுரை குருவாயூர் ரயிலில் அகலமான கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் மேற்கூரையும் கண்ணாடியில் இருக்கும்.
Vistadome Train3/5

மதுரை - குருவாயூர் விஸ்டாடோம் ரயில் சேவை அக்.22-ல் துவக்கம்

இதன் மூலம், 360 டிகிரியிலும் இயற்கை அழகை ரசித்தப்படி பயணிக்கலாம். தென்காசி, புனலூர், கொல்லம் வழியே செல்லும் இந்த வழித்தடத்தின் அழகை விஸ்டாடோம் பெட்டியில் அமர்ந்து ரசிப்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். குருவாயூர் - மதுரை (ரயில் எண்: 16328): அக்டோபர் 23, 2026 முதல் ஜனவரி 16, 2027 வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை - குருவாயூர் ரயில் எண் 16327: அக்டோப்ர 22ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்டாடோம் ரயில் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இயக்கப்படும்.
Vistadome Train4/5

விஸ்டடோம் ரயிலில் இருக்கைகள் விவரம்

இந்த ரயிலில் 1 - எக்ஸிகியூட்டிவ் ஏசி சேர் கார் (விஸ்டாடோம் பெட்டி), 1 - இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி (2AC), 2 - படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), ​7 - முன்பதிவில்லா பொதுப் பெட்டிகள் (General Second Class), 1 - மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி கொண்ட பெட்டி (Divyangjan Friendly), 1 - லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் இருக்கும். மேலும், வெளியே தெரியும் இயற்கை அழகை முழுமையாகக் காண 180 டிகிரி சுழலும் சொகுசு இருக்கைகள் இருக்கும். டிஜிட்டல் தகவல் திரைகள் மற்றும் அதிநவீன உட்புற வடிவமைக்கப்பட்டுள்ளது.
Vistadome Train5/5

விஸ்டடோம் ரயில் கட்டணம் விவரம்

இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி வைக்கப்பட்டது. பயணிகள் ரயில் ஒன் செயலி மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விஸ்டாடோம் ரயிலின் அடிப்படை கட்டணம் ரூ.515 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை - குருவாயூர் முழுமையான பயணத்திற்கு ரூ.1875 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TAGS:
Southern Railway

Trending

  • News
  • Photos
  • Videos
விஜயதசமி 2026 : குழந்தைகளை ‘அ..ஆ’ எழுத வைக்கலாம்! நல்ல நேரம் எது? இதோ முழு விவரம்..

விஜயதசமி 2026 : குழந்தைகளை ‘அ..ஆ’ எழுத வைக்கலாம்! நல்ல நேரம் எது? இதோ முழு விவரம்..

2

கதையே மாறப்போகுது..இனி சமூக வலைதளத்தில் ஒரு தலைபட்ச கருத்தே வராது! மத்திய அரசு அதிரடி..

3

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்.. BCCI அறிவிப்பு!

4

ஆயில்யம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: அடுத்த 25 நாட்களுக்கு இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்!

5

CM விஜய் குறித்து திமுக பெண் நிர்வாகி நாராசப் பேச்சு.. மேடையில் ஷாக்கான கனிமொழி எம்பி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.