DMK Controversy: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமே மாறிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று, முதல்வராக விஜய் இருக்கிறார். தேர்தலுக்கு பிறதே தவெக, திமுக ஒருவரைக்கொருவர் என இரு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், அநாகரிகமான முறையிலும் இருகட்சிகளும் மாறி மாறி பேசி வருகின்றன. இந்த நிலையில், திமுக பெண் நிர்வாகி ஒருவர் முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
சென்னையில் நேற்று (அக்டோபர் 18) திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய திமுக பெண் நிர்வாகி ஒருவர், முதல்வர் விஜய்யை ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. திமுக பெண் நிர்வாகி மேடையில் பேசுகையில், "சட்டப்பேரவையில் அமர்ந்து, எங்கள் தலைவர் (ஸ்டாலின்) அழகை குறை சொல்கிறார்.
எங்கள் தலைவருக்கு வயது 74. உனக்கு என்ன வயது 52 வயது தான்” போன்று அவர் சொன்ன வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு இருந்தது. அந்தளவுக்கு முதல்வர் விஜய் தரக்குறைவாகவும், இழிவாகவும் திமுக பெண் நிர்வாகி பேசினார். இவரின் பேச்சை கேட்டு, மேடையில் அமர்ந்திருந்த மேயர் பிரியா சிரித்தார். அதே நேரத்தில், எம்பி கனிமொழி எதுவும் கண்டிக்காமல் மேடையில் அமைதியாக அமர்ந்திருந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. திமுக பெண் நிர்வாகியின் அநாகரிக பேச்சுக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தான கண்டனம் தெரிவித்துள்ளார்.
Is abuse wrong only when u’re the target, or does ur outrage disappear when the victim is #CMJosephVijay? #MayorPriya and #Kanimozhi are sitting on the stage, laughing while a woman openly abuses & wishes death upon #Vijay anna. Not a word of condemnation. Not even a basic reaction.🤬 Shame on you @PriyarajanDMK & @KanimozhiDMK 🤬🤡
— Pikachu 💫 (@Manju_thoughts) October 19, 2026
இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "வன்மையான கண்டனங்கள்! மேடை நாகரிகம் துளியும் இல்லாமல் பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள்.
நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான் திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புக்குரிய முதலமைச்சர் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு,நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர்.
அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார். மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி MP இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். "தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?"
வன்மையான கண்டனங்கள்! மேடை நாகரிகம் துளியும் இல்லாமல் பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள். நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான் திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புக்குரிய முதலமைச்சர் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு, நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர். அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார். மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி MP இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். '"தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?" ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது. கனிமொழி MP அவர்களே, மேயர் பிரியா அவர்களே, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா? இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா? தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்.
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) October 19, 2026
ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது. கனிமொழி MP அவர்களே, மேயர் பிரியா அவர்களே, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா?
இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா? தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்" என தெரிவித்துள்ளார்.