தவறான பதிவுகளைப் அதிகரிக்கும் அல்லது பயனர்களை குறுகிய ஒருதலைபட்சமான கண்ணோட்டங்களுக்கு ஆட்படுத்தும் அல்காரிதம்களுக்கு எதிராக மத்திய அரசு எச்சரித்துள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பரிந்துரைக்கப்படும் கண்டெண்ட்களின் விதத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மெட்டா நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. அக்டோபர் 10 தேதியிட்ட அந்த அறிவுரையானது, பொது மக்களின் அமைதியை குலைக்கக்கூடிய கண்டெண்டுகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியிருக்கிறது.
மத்திய அரசு, மெட்டா நிறுவனத்தை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களது பந்யனர்களுக்கு என்ன பரிந்துரைக்கின்றன என்பதை மெட்டா நிறுவனம் கூர்ந்து கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது. தவறான தகவல்கள் தரும் பதிவுகள், திரியப்பட்ட காட்சிகள் அல்லது நிகழ்வுகள், ஒரு தலைப்பட்சமான விவரங்களுக்கு தன்னுடைய அல்காரிதம்தான் அதிகப்படியான முக்கியத்துவத்தை அளிக்க அனுமதிக்க வேண்டாம் என அரசாங்கம் அந்த நிறுவனத்தை எச்சரித்திருக்கிறது.
அக்டோபர் 10ஆம் தேதி, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மெட்டா தளங்களில் பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கங்கள் மீதான தன்னுடைய சோதனைகளை வலுப்படுத்தவும், பயனர்களுக்கு ஒரே மாதிரியான ஒரு தலைபட்சமான கருத்துகள் மீண்டும் மீண்டும் காட்டப்படுவதில்லை என்பதை உறுதி செய்யவும், மெட்டா நிறுவனத்தை கேட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டம் ஒழுங்கை குலைக்கக்கூடிய அல்லது வன்முறையை தூண்டக்கூடிய உள்ளடக்கங்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், அந்த அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.
இந்த உத்தரவுக்கு பின்பு, ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை அந்த ஆலோசனைக்குறிப்பு குறிப்பிடவில்லை. இருப்பினும், வாக்காளர் சிறப்பு தீவிர மறு ஆய்வில் முறைகேடு (SIR) தொடர்பாக தேர்தல் தலைமை ஆணையரான ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரியும் காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த வேளையில், இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி இருப்பது, பேசுபொருளாகி இருக்கிறது.
அல்காரிதம் அடிபடையில், ஒரு கண்டெண்டை அதிக எண்ணிக்கையிலான பயனர்களுக்கு அனுப்பும் போது, அது எவ்வாறு பரவலாக அறியப்படுகிறது என்பது குறித்து அரசு, கவலை தெரிவித்துள்ளது. உதாரணத்திற்கு, ஏதோவொரு சம்பவத்தின் முந்தையை காணொளியில் தேதியும் இடமும் தெளிவக இல்லை எனும் பட்சத்தில், அது தற்போதைய நிகழ்வின் காணொளியாக தவறாக கருதப்படலாம்.
அதே போல, அவசரகால நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் அல்லது காவல்துறை நடவடிக்கை குறித்த சரிபார்க்கப்படாத கூற்றுகள், அந்த தகவல் துல்லியமானதா என்பதை பயனர்கள் தெரிந்து கொள்ளாமலேயே பகிரக்கூடும்.
குறிப்பாக, பொதுமக்களின் உணர்திறன் அதிகம் இருக்கும் சமயங்களில், இது போன்ற கண்டெண்டுகள் மெட்டா நிறுவனம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. தவறாக வழிநடத்தக்கூடிய உள்ளடக்கங்களை, மெட்டா எவ்வாறு கையாளுகிறது என்பதையும், சம்பவத்திற்கு தொடர்பில்லாத் காட்சிகள் மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்படுவதை தடுப்பதையும் ஆராயுமாறு மத்திய அரசு அந்த நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது.