Madurai Meenakshi Amman Temple: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 6 நாட்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்து.
Madurai Meenakshi Amman Temple: எந்தெந்த தேதிகளில் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
1/5
மதுரை மீனாட்சி அம்மன்
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் தரிசனத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் கோயில் நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 6 நாட்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2/5
மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்டம்பர் 17ஆம் தேதி வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளையும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகளும் நடைபெற உள்ளது.
3/5
மதுரை மீனாட்சி அம்மன்
செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் செப்டம்பர் 16ஆம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா நடைபெற உள்ளது.
4/5
மதுரை மீனாட்சி அம்மன்
மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முனன்னிட்டு, வருகிறது செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் மூலவர் சன்னதிகளில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெறும் என்றும் இதனால் அந்த நாட்களில் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய முடியாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
5/5
மதுரை மீனாட்சி அம்மன்
இதனை பக்தர்கள் இதற்கு ஏற்ப தங்கள் தரிசனங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.