• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அக்.26ம் தேதி உருவாகிறது 'அர்னாப்' புயல்.. தமிழகத்திற்கு ஆபத்தா? வானிலை மையம் எச்சரிக்கை!

அக்.26ம் தேதி உருவாகிறது 'அர்னாப்' புயல்.. தமிழகத்திற்கு ஆபத்தா? வானிலை மையம் எச்சரிக்கை!

Arnab Cyclone: வங்கக்கடலில் அக்டோபர் 26ஆம் தேதி புயல் உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த அர்னாப் (கடல் அர்த்தம்) என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. அர்னாப் புயலால் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Oct 23, 2026, 09:25 AM IST|Updated: Oct 23, 2026, 09:55 AM IST
joinshare
அக்.26ம் தேதி உருவாகிறது 'அர்னாப்' புயல்.. தமிழகத்திற்கு ஆபத்தா? வானிலை மையம் எச்சரிக்கை!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இனி திமுகவால் ஜெயிக்கவே முடியாது... அடித்துச் சொல்லும் அமைச்சர் விஸ்வநாதன்

இனி திமுகவால் ஜெயிக்கவே முடியாது... அடித்துச் சொல்லும் அமைச்சர் விஸ்வநாதன்

2

அக்.26ம் தேதி உருவாகிறது 'அர்னாப்' புயல்.. தமிழகத்திற்கு ஆபத்தா? வானிலை மையம் எச்சரிக்கை!

3

'உங்கள் மக்களின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்யுங்கள்": ஐ.நா-வில் பாகிஸ்தானுக்கு பாடமெடுத்த இந்தியா

4

ஊருக்கு போறீங்களா? இன்று முதல் சிறப்பு பேருந்துகள்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு விவரம்

5

EPS Pension: 10 ஆண்டு சர்வீஸ், ரூ.15,000 சம்பளம்... மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Arnab Cyclone: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்

வங்கக்கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 23) காலை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி  உருவாகி உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்டோபர் 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 25ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும். 

தொடர்ந்து, அக்டோபர் 26ஆம் தேதிக்குள் புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புயலாக உருவானால் வங்கதேசம் பரிந்துரைத்துள்ள  அர்னாப் என்ற பெயர் சூட்டப்படும். அர்னாப் என்ற கடல் என்று அர்த்தம்.  மேலும், நடப்பாண்டில் வங்கக்கடலின் முதல் புயலாகவும் அர்னாப் இருக்கும்.

மேலும் படிக்க: ஊருக்கு போறீங்களா? இன்று முதல் சிறப்பு பேருந்துகள்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு விவரம்

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அக்டோபர் 23ஆம் தேதி  கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். 

ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 24ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். 

திருப்பூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: மகளிருக்கு CM விஜய்யின் தீபாவளி பரிசு! நவம்பர் முதல் வாரத்திலேயே ரூ.1000 வரவு? மகளிர் உரிமைத் தொகை அப்டேட்!

சென்னைக்கு கனமழை அலர்ட்

சென்னையை பொறுத்தவரை, அக்டோபர் 23ஆம் தேதியான இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அக்டோபர் 23ஆம் தேதியான இன்று முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை தமிக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர்  வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இந்த நாட்களில் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: இனி வெறும் 3 மணி நேரத்தில் சென்னை டு ஹைதராபாத்: வருகிறது புல்லட் ரயில்.. பணிகள் தொடக்கம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather