TNSTC Special Buses: தமிழகத்தில் பிரதான போக்குவரத்தாக இருப்பது போக்குவரத்து சேவை. பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்களில் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால், தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் வார இறுதி நாட்கள், பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, அக்டேபார் 23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), அக்டோபர் 24ஆம் தேதி (சனிக்கிழமை). அக்டோபர் 25ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம் மற்றும் பௌர்ணமி) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம்,மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 775 பேருந்துகளும், அக்டோபர் 24ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று 485 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 95 பேருந்துகளும். அக்டோபர் 24ஆம் தேதி சனிக்கிழமை அன்று 85 பேருந்துகளும். அக்டோபர் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருவண்ணாமலைக்கு 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து அக்டோபர் 23, 24ஆம் தேதிகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர். ஒசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 65 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @TamilanParthib1 @arasubus #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople https://t.co/TMJ4DZEQUW
— TN DIPR (@TNDIPRNEWS) October 22, 2026
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் அக்டோபர் 25ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 12884 பயணிகளும், சனிக்கிழமை அன்று 9086 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 16922 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே. பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்க பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது,