Magalir Urimai Thogai Thittam Update: நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் விஜய் இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளார்.
Magalir Urimai Thogai Thittam Update: மகளிர் உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் அக்டோபர் 15ஆம் தேதி பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
1/5
மகளிர் உரிமைத் தொகை
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை தொடங்கப்பட்டது. இத்திட்ட மூலம் தமிழகத்தில் 1.31 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகையானது ரூ.1000 ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகும், இத்திட்டம் தொடர்ந்து வருகிறது.
2/5
மகளிர் உரிமைத் தொகை முக்கிய அப்டேட்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகும், மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 முன்கூட்டிய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
3/5
நவம்பர் முதல் வாரத்திலேயே ரூ.1,000 வரவு?
தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால், மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே வரவு வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக குடும்பத்தின் செலவுகளுக்காக முதல்வர் விஜய் நவம்பர் முதல் வாரத்தில் ரூ.1,000 வரவு வைப்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
4/5
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் விஜய் நடவடிக்கை
தற்போது இந்த திட்டத்தை தமிழக அரசு பரிசீலனையில் தான் வைத்துள்ளது. எனவே, முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பெண்கள் குஷியில் உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5/5
ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது?
இதற்கிடையில், தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என விஜய் வாக்குறுதியாக அளித்தார். ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாக நெருங்க உள்ள சூழலில், இன்னும் எந்த மாதத்திலும் ரூ.2500 உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை முதல்வர் விஜய் அறிவிக்கவில்லை. இதனால், எப்போது ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.