Magalir urimai thogai : மகளிர் உரிமைத்தொகை வராதவர்கள் என்ன செய்ய வேண்டும்? முக்கிய அப்டேட்
Magalir urimai thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் முக்கிய அப்டேட், இந்த மாதம் பணம் வராதவர்கள் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்
1/6
மகளிர் உரிமைத்தொகை
மகளிர் உரிமைத்தொகை (Magalir urimai thogai) திட்டத்தில் தமிழ்நாடு அரசு மாதந்தோறும் 1.31 கோடி பெண்களுக்கு தவறாமல் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்து வருகிறது.
2/6
பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு
ஒவ்வொரு மாதமும் 14 அல்லது 15 தேதிகளில் இந்த தொகையை வரவு வைப்பது வழக்கம். ஆனால் இந்த மாதம் தீபாவளி பண்டிகை மாதம் என்பதால் அரசு சர்பிரைஸாக முன்கூட்டியே இந்த தொகையை வரவு வைக்குமா? என பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
3/6
மகளிர் உரிமைத்தொகை எப்போது உயர்த்தப்படும்
அரசும், மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே விடுவிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஒரு முக்கிய அப்டேட்டை தெரிவித்துள்ளார். விழா ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் மகளிர் உரிமைத்தொகை எப்போது உயர்த்தப்படும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
4/6
பணம் அனுப்பப்படுவதில்லை
அதற்கு பதில் அளித்த அவர், இதற்காக பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அப்டேட் வெளியாகும் என கூறினார். இந்த பேட்டியின்போது இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார். அது என்னவென்றால், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் சரியாக இல்லாதவர்களுக்கு பணம் அனுப்பப்படுவதில்லை என கூறினார்.
5/6
ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை
மேலும், வங்கிக் கணக்கு விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தாலும் அந்த குறிப்பிட்ட பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், அது சரி செய்தவுடன் தொகை விடுவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
6/6
விதிமுறைகள் மறுசீரமைப்பு
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைப் பொறுத்தவரை விரைவில் விரிவாக்கமும், விதிமுறைகள் மறுசீரமைப்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை குறிப்பிட்டே அமைச்சர் ஜெகதீஸ்வரி இப்போது இக்கருத்தை தெரிவித்திருக்கிறார் என பேசப்படுகிறது.