• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /நவம்பர் 13ம் தேதி பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கேக்.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 13ம் தேதி பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கேக்.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

TN Govt Childrens Day Cake: குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்குகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 04, 2026, 12:15 PM IST|Updated: Nov 04, 2026, 12:30 PM IST
joinshare
நவம்பர் 13ம் தேதி பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கேக்.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 63% ஆக உயர்வு.. யாருக்கு என்ன பலன்?

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 63% ஆக உயர்வு.. யாருக்கு என்ன பலன்?

2

ஸ்ரீலீலா vs மமிதா பைஜு! கோலிவுட்டை கலக்கப்போகும் ஹீரோயின் யார்? அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ்

3

இந்தியன் வங்கி அப்ரண்டிஸ் பணி நியமனம்: 1500 காலியிடங்கள், விண்ணப்பிப்பது எப்படி?

4

நவம்பர் 13ம் தேதி பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கேக்.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

5

அமெரிக்க தேர்தல் முடிவுகள் 2026: செனட், ஹவுஸ், ஆளுநர் போட்டிகளில் வென்றவர்களின் முழு பட்டியல்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Govt Childrens Day Cake: நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 61 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளது.  குழந்தைகளுடன் கேக் உடன் வாழ்த்து அட்டைகளும் தமிழக அரசு வழங்க உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

குழந்தைகள் தினத்திற்கு கேக்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் என மொத்தம் 61,84,566 பேருக்கு கேக் (Cake) வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 பேருக்கு குழந்தைகள் தினத்தன்று இலவச கேக் வழங்கப்பட உள்ளது.

எப்போது கேக் வழங்கப்படும்?

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், விற்பனையாளர்கள் 38 மாவட்டங்களிலும் உள்ள TNCSC கிடங்குகளில் கேக்குகளை ஒப்படைப்பர்.  நவம்பர் 10ஆம் தேதிக்குள் பாடநூல் கழகம் மூலம் வாழ்த்து அட்டைகள் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வந்து சேரும். நவம்பர் 11,12ஆம் தேதிகளில் TNCSC கிடங்குகளிலிருந்து பள்ளிகளுக்கு கேக்குகள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து வாழ்த்து அட்டைகள் கொண்டு செல்லப்படும். நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை என்பதால், நவம்பர் 13ஆம் தேதியே குழந்தைகள் அனைவருக்கும் கேக்குகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் வாழ்த்து அட்டைகளை வழங்க வேண்டும்.  கேக்குகளை மாணவர்கள், ஆசிரியர்கள், SMC ஆசிரியர் உறுப்பினர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் என அனைவருக்கும் வழங்க வேண்டும்.

மேலும் படிக்க: மகளிர் உரிமைத்தொகை : இந்த மாதம் வராதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

எந்த மாவட்டத்தில் எந்த கேக்?

தமிழ்நாட்டை 3 பிரிவாக பிரித்து 3 வகை கேக்களை தமிழக அரசு வழங்குகிறது. அதன்படி,

  • மயிலாடுதுறை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திருவண்ணாமலை, மற்றும் திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு மாணவருக்கு ட்ரீம் கேக்ஸ்/விங்கீஸ் தயாரிப்பு 25 கிராம் உள்ள 2 மினி ஸ்விஸ் ரோல் பாக்கெட்டுகள் வழங்கப்படும்.
  • கோயம்புத்தூர், திருப்பூர். நீலகிரி, ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு மாணவருக்கு ஐடிசி தயாரிப்பு 21.6 கிராம் உள்ள 2 மினி கேக் பாக்கெட்டுகள் வழங்கப்படும்.
  • மற்ற மாவட்டங்களில் ஒரு மாணவருக்கு ட்ரீம் கேக்ஸ்/விங்கீஸ், பிரிட்டானியா, எலைட் தயாரிப்பு 45 கிராம் உள்ள ஒரு பாக்கெட் வழங்கப்படும்.

வருகை புரியாத மாணவர்களுக்கும் கேக்

உரிய நாளன்று வருகை புரியாத மாணவர்களுக்கான கேக்குகளைப் பாதுகாப்பாக வைத்து, அவர்கள் பள்ளி வரும் நாளில் வழங்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து அட்டை கிடைத்துள்ளதை உறுதி செய்ய வேண்டும். விநியோகம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைப் பள்ளியில் பராமரிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விட்டால் ரூ.5 லட்சம் அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

கட்டாய வழிகாட்டுதல்கள்

உணவு ஒவ்வாமை அல்லது உணவுக் கட்டுப்பாடு உள்ள மாணவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாணவர்கள் கைகளைக் கழுவிய பின்னர் பெற வேண்டும்; விநியோகம் ஒழுங்காகவும் சமமாகவும் நடைபெற வேண்டும்; எந்த மாணவரும் விடுபடக்கூடாது.  கேக் உறைகளைக் குப்பைத் தொட்டிகளில் சேகரித்து, வளாகத்தைத் தூய்மையாக வைக்க வேண்டும்.

இந்த திட்டத்தை தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு நிலையிலும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்து, 13.11.2026 அன்று அனைவருக்கும் கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் நிறைவாக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு, இப்பணியில் எவ்வித புகாருக்கும் இடந்தராத வகையில் செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: அண்ணன் சீர் திட்டம் முக்கிய அறிவிப்பு! டெண்டர் வெளியீடு - முக்கிய தேதிகள், நிபந்தனைகள் முழு விவரம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu