• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்... இந்த 3 ராசிகளுக்கு நன்மைகள் பொழியும்

உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்... இந்த 3 ராசிகளுக்கு நன்மைகள் பொழியும்

Written BySudharsan G
Published: Oct 30, 2026, 06:50 PM IST|Updated: Oct 30, 2026, 06:56 PM IST
joinshare
சந்திர பகவான் வரும் நவம்பர் 1ஆம் தேதி அன்று கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஏற்கெனவே கடக ராசியில் செவ்வாய் பகவான் வீற்றிருக்கிறார். இதனால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் மூன்று ராசிகளுக்கு நன்மைகள் குவியும்.

நவம்பர் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகாலட்சுமி ராஜயோகம் உருவாகும். நவம்பர் 3ஆம் தேதிவரை நீடிக்கும். அதன்பின் சந்திர பகவான் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இரண்டரை நாட்கள் மட்டுமே சந்திர பகாவன் ஒரு ராசியில் வீற்றிருப்பார்.

Mahalakshmi Rajayogam1/6

கடக ராசியில் சந்திர பகவான்

வேத ஜோதிடத்தின்படி, சந்திர பகவான் தாய்மை, அறிவாற்றல், சந்தோஷம், மன அமைதிக்கு காரணமானவர். 9 கிரகங்களில் அதிவேகத்தில் நகர்பவர், சந்திரன்தான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இரண்டரை நாட்களில் பெய்ர்ச்சி அடைவார். அந்த வகையில், ராசிகளுக்கு இடையே பெயர்ச்சி அடையும்போது மற்ற கிரகங்களுடன் சந்திர பகவான் இணைவார்.
Mahalakshmi Rajayogam2/6

மகாலட்சுமி ராஜயோகம்

அந்த வகையில், மிதுன ராசியில் இருக்கும் சந்திர பகவான் வரும் நவம்பர் 1ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைவார். ஏற்கெனவே கடக ராசியில் செவ்வாய் பகவான் வீற்றிருக்கிறார். இதனால், சந்திரன் - செவ்வாய் சேர்க்கை நவம்பர் 1ஆம் தேதி நிகழ்கிறது. இதனால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. நவம்பர் 3ஆம் தேதி வரை இருக்கும் இந்த ராஜயோகத்தால் பயனடையும் மூன்று ராசிக்காரர்களை இங்கு காணலாம்.
Mahalakshmi Rajayogam3/6

கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள்

மகாலட்சுமி ராஜயோகத்தால் பல துறைகளில் சாதகமான விளைவுகள் ஏற்படும். இந்த ராஜயோகத்தால் கன்னி ராசியின் கோசார ஜாதகத்தில் 11வது வீட்டில் உருவாகிறது. இதனால், உங்களின் நீண்டநாள் ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. புதிய வருமான ஆதாரங்களும் உருவாகலாம். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரலாம். சமுதாயத்தில் உங்களுக்கு மதியும் மரியாதையும் உயரும். சொத்துக்களில் முதலீடு செய்வது நல்ல லாபத்தைத் தரும். உங்களது ஆரோக்கியம் படிப்படியாக முன்னேற்றம் அடையும்.
Mahalakshmi Rajayogam4/6

துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்

இந்த ராஜயோகத்தால் சுப பலன்கள் தேடி வரும். கோசார ஜாதகத்தில் 10வது வீட்டில் செவ்வாய் - சந்திரன் இணைவார்கள். இதனால் பணியிடத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகள் தேடி வரும். உங்களின் வேலை பாராட்டப்படும். பணியில் உள்ளவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் நல்ல இணக்கமான உறவு ஏற்படும். பதவி, அந்தஸ்து உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மன அழுத்தம் குறையும்.
Mahalakshmi Rajayogam5/6

விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள்

இந்த ராஜயோகம் அதிர்ஷத்தையும், முன்னேற்றதையும் வழங்கும். மேலும் இது 9வது வீடான பாக்கிய ஸ்தானத்தில் உருவாகிறது. இதன் காரணமாக, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடைய வாய்ப்புள்ளது. பணியில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கும் அதிர்ஷ்டம் தேடி வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகும். உயர்கல்வி அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இதன்மூலம் நற்பலன்களைப் பெறலாம்.
Mahalakshmi Rajayogam6/6

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
ஜீ நிறுவனத்திற்கு தலைமை இணக்க அதிகாரி & நிறுவன செயலாளராக சங்கீதா ஷெட்டி நியமனம்!

ஜீ நிறுவனத்திற்கு தலைமை இணக்க அதிகாரி & நிறுவன செயலாளராக சங்கீதா ஷெட்டி நியமனம்!

2

பிக்பாஸ் 10 : முக்கிய போட்டியாளருக்கு ரெட் கார்ட்? குக்கர் மூடியை வைத்து தாக்கியதால் அதிர்ச்சி!

3

சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பின்லாந்து ட்ரிப்! அரசின் ஸ்வீட் அறிவிப்பு..

4

ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கும் படம்! இயக்குநர் யார்..? இதோ முழு விவரம்

5

அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு கிரீன் சிக்னல்? பசும்பொன்னில் ஸ்டாலின் சொன்ன பதில்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.