தமிழ் திரையுலகில், காமெடி நடிகராக இருந்து இப்போது ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் சூரி, சமீபத்தில் நடித்திருந்த திரைப்படம் மண்டாடி. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டை இங்கு தெரிந்து கொள்வோம்.
மண்டாடி திரைப்படத்தில், நடிகர் சூரி ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை மதிமாறன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பதை அடுத்து, இப்படத்தை எப்போது, எந்த தளத்தில் ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
மண்டாடி திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நாள்
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், கடந்த மாத்ஹம் 10ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் மண்டாடி. இதில், நடிகர் சூரி ஹீரோவாக நடித்திருக்கிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
2/5
மண்டாடி திரைப்படத்தின் கதைக்களமும் முக்கிய அம்சமும்
மண்டாடி திரைப்படம், மீனவர்களின் வாழ்க்கையை வைத்து கதைக்களமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில், இவர்களுக்குள் பாய்மரப் படகுப்போட்டி கதையின் முக்கிய அம்சமாகும். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி மக்களை ஈர்த்தது. நடிகர் ரஜினிகாந்த் கூட இப்படத்தை பாராட்டி இருந்தார்.
3/5
மண்டாடி திரைப்படத்தின் வசூல்
மண்டாடி திரைப்படம், தற்போது வரை ரூ.150 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடியை இப்படம் வசூலித்திருக்கிறது. இந்த சூழலில்தான் படத்தின் ஓடிடி அப்டேட்டும் வெளிவந்துள்ளது.
4/5
மண்டாடி படம் ஓடிடி ரிலீஸ் தேதி
அக்டோபர் 8ஆம் தேதி, மண்டாடி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) தளத்தில் வெளியாக இருக்கிறது. தியேட்டரில் இந்த படத்தை பார்க்க தவறியவர்கள் இதனை ஓடிடியில் பார்க்கலாம்.
5/5
வெவ்வேறு மொழிகளில் வெளியாகும் மண்டாடி
இன்னும் சில தினங்களில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகப்போகும் மண்டாடி படத்தை தமிழ் மட்டுமன்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் காணலாம். தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், ஓடிடியிலும் நிறைய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.