mannin magal thittam 2026 : பெண்கள் சொந்த நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் கொடுக்கும் தமிழ்நாடு அரசின் மண்ணின் மகள் திட்டம் குறித்த புதிய அப்டேட்
mannin magal thittam 2026 : மண்ணின் மகள் திட்டத்தில் பெணகள் நிலம் வாங்க எப்படி விண்ணப்பிப்பது, எவ்வளவு மானியம் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/7
திட்டத்தின் முதன்மை நோக்கம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிரை நில உரிமையாளர்களாக உருவாக்கி, அவர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
2/7
ரூ. 5 லட்சம் வரை மானியம்:
இத்திட்டத்தின் கீழ் நிலம் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசால் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்ச மானியத் தொகை ரூ. 5 லட்சம் ஆகும்.
3/7
வயது மற்றும் வருமான வரம்பு:
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்; மேலும் அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
4/7
சொந்த நிலம் பற்றிய நிபந்தனை:
விண்ணப்பிக்கும் பயனாளிகள் அல்லது அவர்களின் குடும்பத்தினரின் பெயரில் நிலம் வாங்கும் முன் சொந்தமாக எந்தவொரு விவசாய நிலமும் இருக்கக் கூடாது.
5/7
வாங்கக்கூடிய நிலத்தின் அளவு:
இத்திட்டத்தின் நிதியுதவியைக் கொண்டு பயனாளிகள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வரை வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
6/7
பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் விலக்கு:
இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலத்திற்கான முத்திரைத்தாள் கட்டணம் (Stamp Duty) மற்றும் பதிவுக் கட்டணத்தில் (Registration Fee) இருந்து பயனாளிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
7/7
நில விற்பனை மீதான கட்டுப்பாடு:
இத்திட்டத்தின் மூலம் வாங்கப்படும் விவசாய நிலத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு வேறு எவருக்கும் விற்பனை செய்யக் கூடாது என்ற முக்கியமான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.