• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

Tamil Nadu Government Salary Hike : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக அரசு முக்கிய உத்தரவிட்டுள்ளது. முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 09, 2026, 07:19 PM IST|Updated: Oct 09, 2026, 07:26 PM IST
joinshare
தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!
Image Credit: Tamil Nadu Government Salary Hike

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

2

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

3

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

4

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

5

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை - அரசு அதிரடி அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பகுதி நேர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு முழு தொகுப்பூதியம் வழங்குவது தொடர்பான முக்கிய சுற்றறிக்கையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் வெளியிட்டுள்ளார். இச்சுற்றறிக்கை சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், உதவி இயக்குநர்களுக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

19,656 பணியாளர்கள் பயன்பெறும் ஊதிய உயர்வு

தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் 19,656 பேருக்கு இந்த உத்தரவு பெரும் பலனைத் தரும். அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 2,724 பேரும், திருச்சியில் 1,803 பேரும், திருவண்ணாமலையில் 1,722 பேரும், தஞ்சாவூரில் 1,529 பேரும், சிவகங்கையில் 1,352 பேரும், விழுப்புரத்தில் 1,318 பேரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர்.

ஊதியக் கணக்கீடு மற்றும் நிலுவைத் தொகை விவரம்

பல்வேறு மாவட்டங்களில் தொகுப்பூதியம் வழங்குவதில் நிலவி வந்த மாறுபாடுகளைக் களைந்து, அரசாணை எண்: 17 நாள்: 30.01.2026-ன் படி சீரான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

தொகுப்பூதியம்: ரூ. 5,000   
தற்காலிக உயர்வு, 6 மாதங்களுக்கு ஒருமுறை: ரூ. 100   
சிறப்புப் படி: ரூ. 200   
மொத்த ஊதியம்: ரூ. 6,700  

அரசாணை வெளியிடப்பட்ட நாளான 30.01.2026 முதல் கணக்கிடப்பட்டு, அந்தந்த ஊராட்சிகளின் நிதிநிலைக்கு ஏற்ப நிலுவைத் தொகையானது தவணை முறையிலோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ வழங்கப்படும் என ஆணையரின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள்

குழு காப்பீடு: பணியாளர்களுக்கு உரிய தலைப்பில் குழு காப்பீட்டு சந்தா மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கான ரசீது கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.  

ஓய்வு வயது: அரசாணை விதிகளின்படி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் பணி ஓய்வு வயது 60 ஆகும். அந்த வயதை அடையும் போது உரிய ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.  

பணிப்பதிவேடு மற்றும் வருகைப்பதிவு: இவர்களுக்கு முறைப்படி பணிப்பதிவேடு தொடங்கப்பட்டு காலமுறை பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊராட்சி வருகைப்பதிவேட்டில் தினசரி வருகையைப் பதிவு செய்வது கட்டாயமாகும்.  

புதிய நியமனங்களுக்கான கட்டுப்பாடு: கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேவையின்றி தன்னிச்சையாக பணியாளர்களை நியமிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, இனி புதிய நியமனங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் முன் இசைவுடன், ஊராட்சி மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும்.  

இப்பணிகளை விரைவுபடுத்தும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பயனாளிகளின் விவரங்களை TN-PASS இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அரசின் இந்த நடவடிக்கை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu