• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

2014 ஐபிஎல் ஏலத்தில் ஜஸ்பிரித் பும்ராவை எடுக்க ஆர்சிபி நிர்வாகத்திடம் பரிந்துரைத்தும், அவர்கள் தவறவிட்டது குறித்து முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் சொன்ன தகவலை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Oct 09, 2026, 07:44 PM IST|Updated: Oct 09, 2026, 07:50 PM IST
joinshare
2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!
Image Credit: Jasprit Bumrah, MI vs RCB 2013 | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

முன்னாள் இந்திய அணி பேட்டரான பார்த்தீவ் பட்டேல், ஆர்சிபி அணி ஜஸ்பிரித் பும்ராவை எடுக்கும் வாய்ப்பை தவறவிட்ட கதையை பகிர்ந்துகொண்டுள்ளார். 2014ஆம் ஆண்டில் ஜஸ்பிரித் பும்ராவை எடுக்கும்படி பார்த்தீவ் பட்டேல் அறிவுறுத்தியும், அதை ஆர்சிபி தவறவிட்டதாக  தெரிகிறது.

2014 மெகா ஏலத்தின் நடுவே, ஆர்சிபி அணி பார்த்தீவ் பட்டேலை எடுத்தது. ஆர்சிபி அவரை எடுத்த பின்னர், பும்ராவையும் எடுக்கும்படி அட்வைஸ் கொடுத்துள்ளார். ஆனால் அவரை ஆர்சிபி எடுக்கவில்லை. பார்த்தீவ் பட்டேல் மற்றும் பும்ரா இருவரும் உள்நாட்டு தொடர்களில் குஜராத் அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

2013இல் அறிமுகமான பும்ரா

2013ஆம் ஆண்டிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்பிரித் பும்ராவை அறிமுகப்படுத்திவிட்டது. அந்த தொடரில்தான் ஆர்சிபியின் விராட் கோலியின் விக்கெட்டை ஜஸ்பிரித் பும்ரா எடுத்திருந்தார். ஐபிஎல் தொடரில் அந்த விராட் கோலி விக்கெட்தான், பும்ராவின் முதல் விக்கெட் ஆகும்.

அப்படியிருக்க, 2014 மெகா ஏலத்தை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தக்கவைக்கவில்லை, ஏலத்தில் விடுவித்தது. பின்னர் 2014 மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பெரும் போர் நடைபெற்றது. இறுதியில் ரூ.1.40 கோடிக்கு மும்பை அணி பும்ராவை எடுத்தது.

மும்பையின் ஸ்டார் வீரராக மாறிய பும்ரா

பும்ரா ஐபிஎல் மற்றும் சாம்பின்ஸ் லீக் தொடர்களில் 161 இன்னிங்ஸில் 190 விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். பும்ரா அணிக்குள் வந்த பின்னர் 4 கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் வென்றுவிட்டது. ஆனால் ஆர்சிபி அணி 2025, 2026 சீசன்களில்தான் கோப்பைகளை வென்றிருக்கிறது. பார்த்தீவ் பட்டேல் மும்பை அணியில் Scouting-ல் பணியாற்றியிருக்கிறார்.

மேலும் படிக்க | IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

பும்ரா என்ன செய்துவிடுவார்...?

தொலைக்காட்சி நேரலையின் போது பார்த்தீவ் பட்டேல், "2014 மெகா ஏலத்தில் முதல் நாளன்று மதிய உணவு நேரத்தில் நான் தேர்வு செய்யப்பட்டேன். அவர்களிடம் எனக்கு மெசேஜ் வந்தபோது, 'இங்கே ஒரு வீரர் இருக்கிறார், அவரையும் கவனியுங்கள்' என்று அவரிடம் சொன்னேன்.

ஒருவேளை நான் அவர்களிடம் சொன்ன விதம் சரியாக இருக்கவில்லை என நினைக்கிறேன். ஏனென்றால், 'பும்ரா போன்ற வீரர்கள் என்ன செய்துவிடுவார்கள்?' என்பது போன்ற ஒரு பதில் அவர்களிடம் இருந்து வந்தது" என்றார்.

மேலும், நேரலையில் இந்த கதையை சொல்ல, அதன் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலானது குறித்தும் பேசிய பார்த்தீவ் பட்டேல், "நான் அதை அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. அந்த நிலையில் அவரை வாங்குவது மதிப்புக்குரியதாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கவில்லை. அது பரவாயில்லை.

உண்மை கசக்கும்...

ஆனால் அது மிகவும் வைரலாகிவிட்டது. அதனால் X தளத்தில், 'வேப்ப இலைகளும் உண்மையும் எப்போதும் கசப்பானவை' என்று எழுதினேன். மக்கள் அதை தங்களுக்கு தோன்றியபடி எடுத்துக்கொண்டார்கள்" என்றார். அதாவது தான் சொல்லியது ஆர்சிபி நிர்வாகத்திற்கு புரியவில்லையே தவிர, அவர்கள் பும்ராவை குறைத்து மதிப்பிடவில்லை என பார்த்தீவ் பட்டேல் விளக்கி உள்ளார், ஆனால் மக்கள் அதை தவறாக புரிந்துகொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | விக்கெட் கீப்பராகும் ஜெய்ஸ்வால்... இந்திய அணியில் இது ஏன் ரொம்ப முக்கியம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL