Mayiladuthurai Local Holiday: நவம்பர் 16ஆம் தேதி திங்கள்கிழமை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Mayiladuthurai Local Holiday: துலா உற்சவத்தின் கடை முக தீர்த்த வாரி விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
1/5
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் தீபாவளி விடுமுறை முடிந்து, நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், உள்ளூர் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, நவம்பர் 16ஆம் தேதி திங்கள்கிழமை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
2/5
துலா உற்சவத்தின் கடைமுக தீர்த்த வாரி விழா
மயிலாடுதுறை மாவட்டம் துலாக்கட்டத்தில் காவிரி ஆற்றின் கரைகளில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடைபெறும். இந்த துலா உற்சவத்தில் பல்வேறு மாவடட்ங்களில் இருந்து மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி கரைகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.
3/5
நவம்பர் 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஐப்பசி மாதம் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. துலா உற்சவத்தின் கடை முக தீர்த்த வாரி விழாவை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
4/5
நவம்பர் 21 வேலை நாளாக அறிவிப்பு
இதனால், சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கிறது. நவம்பர் 16ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
5/5
மயிலாடுதுறை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
இந்த விடுமுறை தினத்தில் அவசர அலுவலர்களை கவனிக்கும் பொருட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சார்நிலை கருவூலங்கள் குறைந்த பணியாளர்களோடு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். மற்ற மாவட்டங்களில் வழக்கும்போல் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.