• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /கார்த்திகை தீபத் திருநாளன்று மழை! நவம்பர் 20 - 24... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

கார்த்திகை தீபத் திருநாளன்று மழை! நவம்பர் 20 - 24... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Written BySripriya Sambathkumar
Published: Nov 18, 2026, 15:17 IST|Updated: Nov 18, 2026, 15:27 IST
joinshare
Karthigai Deepam Rain Forecast: கார்த்திகை தீப நாளில் மழை பெய்யுமா? அடுத்த ஒரு வாரத்திற்காக வானிலை முன்னறிவிப்பு என்ன? சென்னை வானிலை ஆயும் மையத்தின் பிராந்திய சூறாவளி எச்சரிக்கை மையத் தலைவர் ரேவல் துறை அளித்த தகவல் இதோ.

Karthigai Deepam Rain Forecast: கார்த்திகை தீபத்தன்று (நவம்பர் 24) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றங்களாலும், ஈரப்பதம் அதிகரிப்பதாலும், கிழக்கு திசை அலைகளின் (easterly wave) செயல்பாட்டாலும், நவம்பர் 24–25 தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலான மழை, சாரல் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Chennai IMD1/6

சென்னை வானிலை ஆய்வு மையம்

இன்னும் சில நாட்களில் கார்த்திகை தீப பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் மழை நிலவரம் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள மக்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். இது குறித்து அலைபேசியில் தொடர்புகொண்டபோது சென்னை வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய சூறாவளி எச்சரிக்கை மையத் தலைவர் ரேவல் துறை எமக்கு பிரத்யேக தகவல்களை அளித்தார். அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.
Weather Forecast2/6

வானிலை முன்னறிவிப்பு

வங்கக் கடலில் உருவான அக்வான் புயல் தமிழகத்தை விட்டு விககி ஆந்திரா மற்றும் ஒடிசா இடையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. ஆகையால், நவம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Will it rain on Karthigai Deepam3/6

கார்த்திகை தீபத்தன்று மழை பெய்யுமா

எனினும், கார்த்திகை தீபத்தன்று (நவம்பர் 24) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றங்களாலும், ஈரப்பதம் அதிகரிப்பதாலும், கிழக்கு திசை அலைகளின் (easterly wave) செயல்பாட்டாலும், நவம்பர் 24–25 தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலான மழை, சாரல் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Akvan Cyclone4/6

அக்வான் புயல்

இந்த வானிலை மாற்றங்களால், நவம்பர் 22 ஆம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் லேசான மழை பெய்யத் தொடங்கும். அடுத்த நாளான நவம்பர் 23 ஆம் தேதி இது மிதமான மழையாக மாறக்கூடும். அடுத்த இரண்டு நாட்களில் (நவம்பர் 24,25) தேதிகளில் இது மேலும் வலுப்பெற்று தமிழகம் முழுதும் பரவலான மழை பெய்யக்கடும்.
Tiruvannamalai Karthigai Deepam5/6

திருவண்ணாமலை கார்த்திகை தீப பண்டிகை

கார்த்திகை தீப பண்டிகையை முன்னிட்டி திருவண்ணாமலை செல்ல திட்டமிடும் பக்தர்கள் வானிலை முன்னறிவிப்பை கவனித்து மழைக்கான முன்னெச்சரிக்கைளுடன் பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Karthigai Deepam 20266/6

கார்த்திகை தீபம் 2026

அதேபோல், கார்த்திகை தீபத்தன்று காற்று மற்றும் மழைக்கான வாய்ப்புள்ளதால், வீட்டின் வெளியே விளக்கேற்றி வைக்கும்போது மழைநீர் படாத பாதுகாப்பான இடங்களில் வைப்பது நல்லதாக இருக்கும்.
TAGS:
Tamil Nadu
Weather

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.