பல்வேறு கலாச்சாரங்களையும் மொழிகளையும் கொண்ட இந்தியாவில், மக்களால் அதிக அளவில் பேசப்படும் மொழிகள் எவை? உலகளவில் பழமையான நம் தமிழ் மொழி இந்த வரிசையில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? இந்தியாவில் அதிகம் பேசப்படும் முதல் 5 மொழிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
1/5
தமிழ்
செம்மொழியான நம் தமிழ் மொழி இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 7.8 கோடி மக்களால் தமிழ் மொழி பேசப்பட்டு வருகிறது.
2/5
தெலுங்கு
தென்னிந்திய மொழிகளில் ஒன்றான தெலுங்கு இந்த வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளது. சுமார் 8.3 கோடி மக்கள் தெலுங்கு மொழியைப் பேசுகின்றனர்.
3/5
மராத்தி
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதன்மை மொழியான மராத்தி மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. ஏறத்தாழ 8.5 கோடி பேர் மராத்தி மொழியை பேசி வருகின்றனர்.
4/5
பெங்காலி
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள மொழி பெங்காலி. சுமார் 10 கோடி மக்கள் பெங்காலி மொழியை தங்கள் தாய்மொழியாகவும் முதன்மை மொழியாகவும் பேசுகின்றனர்.
5/5
ஹிந்தி
இந்தியாவின் பெரும்பாலான மக்களால் பேசப்படும் மொழியாக முதலிடத்தில் உள்ளது ஹிந்தி. நாடு முழுவதும் சுமார் 54 கோடி பேர் இந்த மொழியைப் பேசுகின்றனர்.