Mother Dairy Milk Price Hike: பால் விலையை உயர்த்துவதாக மதர் டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. பால் லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்தி மதர் டெய்ரி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
Mother Dairy Milk Price Hike: சமீபத்தில் தான், அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தி இருந்த நிலையில், தற்போது மதர் டெய்ரி நிறுவனம் பால் விலையை உயர்த்தி இருக்கிறது.
1/5
மதர் டெய்ரி பால் விலை உயர்வு
இந்தியாவின் பால் மற்றும் பால் பொருட்களின் தயாரிப்பு நிறுவனமாக மதர் டெய்ரி இருக்கிறது. மதர் டெய்ரி நிறுவனம் நாடு முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் பெரிய அளவில் மக்கள் அதனை வாங்குவதில்லை. அதே நேரத்தில் டெல்லியில் மதர் டெய்ரி நிறுவனம் அதிகளவு பால் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், முக்கிய அறிவிப்பை மதர் டெய்ரி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2/5
பால் விலை உயர்வு நாளை முதல் அமல்
மதர் டெய்ரி நிறுவனம் பாலின் விலையை உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பாலின் விலையை ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளது. இந்த புதிய நாளை (நவம்பர் 12) முதல் அமலுக்கு வர உள்ளது. மதர் டெய்ரி நிறுவனம் கடைசியாக 2026 மே 14 அன்று விலையை உயர்த்தியிருந்தது. அதன் பிறகு, தற்போது மதர் டெய்ரி நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தி இருப்பது சாமானியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
3/5
மதர் டெய்ரி பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு
டெல்லியில் விற்பனை செய்யப்படும் டோன்டு பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு, ரூ.60 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட டோன்டு பாலின் விலை முன்பு ரூ.60 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.62 ஆக உயர்த்தப்பட்டது. ஃபுல் கிரீம் பாலின் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரித்து, ரூ.72-லிருந்து ரூ.76 ஆக உயர்ந்துள்ளது. டபுள் டோன்டு பாலின் விலை முன்பு ரூ.54 ஆக இருந்த நிலையில், தற்போது லிட்டருக்கு ரூ.56 ஆக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4/5
பாதிக்கும் டெல்லி வாசிகள்
டெல்லி-என்சிஆர் பகுதியின் மிகப்பெரிய பால் விநியோக நிறுவனமான மதர் டெய்ரி, கடைசியாக 2026 மே 14 அன்று பால் விலையை உயர்த்தியிருந்தது. அதற்கு முன்பு, அந்நிறுவனம் 2025 ஏப்ரலில் விலைகளைத் திருத்தியமைத்திருந்தது. மதர் டெய்ரி தனது பால் விற்பனை வருவாயில் சுமார் 75-80 சதவீதத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறது. இந்நிறுவனம், டெல்லி-என்சிஆரில் பொது வர்த்தகம் மற்றும் இணையவழி வர்த்தகத் தளங்கள் மூலம் தினமும் சுமார் 35 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்கிறது. இதன் மொத்த தினசரி பால் விற்பனை 50 லட்சம் லிட்டரைத் தாண்டுகிறது.
5/5
பால் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
அதிகரித்து வரும் செலவுகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலை ஆகியவை காரணமாக மதர் டெய்ரி நிறுவனம் பால் விலையை உயர்த்தியதாக கூறப்படுகிறது. ஏற்கவே, வெங்காயம், அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து இருப்பது மக்கள் மத்தியில் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அன்றாடம் பயன்படுத்தும் பால் விலையும் உயர்த்தப்பட்டது சாமானியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.