தென்னிந்திய திரையுலகின் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர், அனிருத் ரவிச்சந்தர். இவர், தொழிலதிபரும் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழில் வெளியான 3 திரைப்படம் மூலம் அறிமுகமாகி, இன்று இந்திய இசைத்திரையுலகில் ஒரு கலக்கு கலக்கு என கலக்கி வருகிறார், அனிருத். இவரும், காவ்யா மாறனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்கள் இன்னும் சில நாட்களில் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
அனிருத் காவ்யா
தமிழ் திரையுலகில், டாப் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்திற்கும், திருமணம் நடக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. ஒரு பக்கம் படம், கான்சர்ட் என பிசியாக இருக்கும் அனிருத்தும், இன்னொரு பக்கம் தொழிலதிபராக பிசியாக இருக்கும் காவ்யா மாறனும் இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருக்கின்றனர்.
2/5
திருமணம்
அனிருத்தும் காவ்யா மாறனும், எங்கே திருமணம் செய்து கொள்ள போகின்றனர், எப்போது திருமணம் செய்து கொள்ள போகின்றனர்? என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வட்டமடிக்க தொடங்கியிருக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்களும் அவர்களின் திருமணத்திற்கு ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
3/5
திருமண விழா
அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் வரும் நவம்பர் 10ஆம் தேதி, 2026 அன்று திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணம், கிரீஸ் நாட்டில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இத்திருமண விழா மிகவும் பெரிய அளவில் நடக்க இருப்பதாகவும், இதில் பல நட்சத்திரங்கள் கலந்து கொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது.
4/5
வைரலான போட்டோக்கள்
அனிருத்தும் காவ்யாவும், ஒன்றாக இருக்கும் சில போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் இதற்கு முன்னர் வைரலாகின. ஆனால், அது குறித்து அவர்கள் எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பதால் அது குறித்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது, இந்த திருமண விஷயம் குறித்தும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5/5
மகேந்திரன் சொன்னது..
சில நாட்களுக்கு முன்னர், நடிகரும் அனிருத்தின் உறவினருமான Y Gee மகேந்திரன், அனிருத்-காவ்யா திருமணம் குறித்து பேசியிருந்தார். அதில், இசை தொடர்பான சில பிசினஸ்களில் இருவரும் ஒன்றாக பணியாற்றுவதாகவும், அவர்களுக்குள் நல்ல புரிதல் இருப்பதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.