• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /IPL: இந்த 3 வீரர்களின் சம்பளம் உயரும்... டிமாண்ட் எகிறும்...

IPL: இந்த 3 வீரர்களின் சம்பளம் உயரும்... டிமாண்ட் எகிறும்...

Written BySudharsan G
Published: Nov 29, 2026, 15:05 IST|Updated: Nov 29, 2026, 15:09 IST
joinshare
ஐபிஎல் 2027 மினி ஏலம் வரும் டிசம்பர் 16இல் நடைபெற இருக்கும் நிலையில், கடந்தாண்டை விட அதிக சம்பளத்தை பெற பிரகாசமான வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

கோவாவில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி ஐபிஎல் 2027 மினி ஏலம் நடைபெற இருக்கிறது. எக்கச்சக்க வீரர்கள் ஏலம் விடப்பட இருக்கும் நிலையில், 1220 பேர் விண்ணப்பித்து பதிவு செய்துள்ளனர். இதில் ஐபிஎல் அணிகள் குறிப்பிட்ட சில வீரர்களையே ஏலத்திற்கு தேர்வு செய்யும். அவர்கள் மட்டுமே ஏலத்திற்கும் வருவார்கள்.

 

IPL Mini Auction 20271/5

மினி ஏலத்தில் டிமாண்ட் அதிகம் இருக்கும்

ஐபிஎல் மினி ஏலத்தில் குறிப்பிட்ட வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள். காரணம், ஐபிஎல் அணிகளுக்கு இடையே குறிப்பிட்ட வகையான வீரர்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கும். வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர், வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்கள் எப்போதும் டிமாண்டில் இருப்பார்கள்.
IPL Mini Auction 20272/5

டிமாண்ட் உள்ள 3 வீரர்கள்

ஆனால் ஐபிஎல் மினி ஏலத்தில் மிக சொற்பமான வீரர்களே ஏலத்திற்கு வருவார்கள், நல்ல ஆப்ஷன்கள் குறைவாக இருக்கும். எனவே, டிமாண்ட் அதிகமாக இருந்து சப்ளை குறைவாக இருப்பதால் குறிப்பிட்ட வீரர்களுக்கு கொடிகள் கொட்டும். அப்படியிருக்க, கடந்தாண்டு பெற்று வந்த சம்பளத் தொகையை விட, இந்த ஏலத்தில் அதிக சம்பளத்தை பெறப்போகும் மூன்று வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
IPL Mini Auction 20273/5

ஷிம்ரோன் ஹெட்மயர்

மிடில் ஆர்டர் அதிரடி பேட்டரான ஹெட்மயர் கடந்த 2025 மினி ஏலத்தில் ரூ.11 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார். இவரை தக்கவைக்க ராஜஸ்தான் அணி பட்லரை கழட்டிவிட்டது. இப்போது ஹெட்மயரை ராஜஸ்தான் கழட்டிவிட்டிருக்கிறது. இருப்பினும் ஹெட்மயரின் அதிரடி ஆட்டம் இப்போதும் சிறப்பாக உள்ளது. எனவே இவர் நிச்சயம் ரூ.11 கோடிக்கும் மேல் எடுக்கப்படுவார். சிஎஸ்கே கூட இவரை எடுக்கலாம் என அஸ்வின் சொல்லியிருந்தார்.
IPL Mini Auction 20274/5

துஷார் தேஷ்பாண்டே

இந்திய வேகப்பந்துவீச்சாளருக்கு எப்போதும் டிமாண்ட் அதிகம் இருக்கும். இவரையும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகள் குறிவைக்கும். இவரை கடந்த மெகா ஏலத்தில் ரூ.6.50 கோடிக்கு ராஜஸ்தான் எடுத்திருந்தது. இவர் ரூ.12 கோடிக்கும் மேல் ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL Mini Auction 20275/5

ஷாருக் கான்

தமிழ்நாடு வீரரான இவர் Uncapped வீரர் ஆவார். இவரை ரூ.4 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி 2025 மெகா ஏலத்தில் தக்கவைத்தது. கடந்த இரண்டு சீசன்களிலும் கடுமையாக சொதப்பினார், முக்கியமான கட்டத்திலும் ஜொலிக்கவில்லை. தற்போது உள்நாட்டு தொடர்களிலும் இவர் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. இருப்பினும் பவர் ஹிட்டிங் பினிஷர் மற்றும் ஆப் ஸ்பின் வெரைட்டியை கொடுப்பதால் இவர் ரூ.6 கோடிக்கு மேல் கூட ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கேகேஆர், எல்எஸ்ஜி, ஆர்சிபி அணிகள் இவரை வாங்கலாம்.
TAGS:
IPL

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
குரு பெயர்ச்சி பலன்கள்: 2027-இல் 3 முறை மாறும் குரு... 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு

குரு பெயர்ச்சி பலன்கள்: 2027-இல் 3 முறை மாறும் குரு... 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு

2

“அப்பாவை காணோம்” என கலாய்த்த தவெக-இப்போ டெல்லியே தேடி வருது! MKS மாஸ் கம்பேக்..

3

டிசம்பர் முதல் வெளுக்கப்போகும் கனமழை.. தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை அப்டேட்

4

Gerrymandering என்றால் என்ன? எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது ஏன்? Explained

5

”எட்டப்பன்கள் இல்லை-கட்டபொம்மன்கள்” ராகுலுக்கு ஸ்டாலின் கொடுத்த தக் ரிப்ளை! அர்த்தம் இதுதான்..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.