• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Gerrymandering என்றால் என்ன? எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது ஏன்? Explained

Gerrymandering என்றால் என்ன? எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது ஏன்? Explained

தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதா விவாதத்தில் அதிகம் பேசப்படும் Gerrymandering என்றால் என்ன? Packing மற்றும் Cracking முறைகள் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்ற முடியுமா? எதிர்க்கட்சிகளின் அச்சத்திற்கான காரணங்களை விரிவாக அறியலாம்.

Written BySudharsan G
Published: Nov 29, 2026, 14:09 IST|Updated: Nov 29, 2026, 14:17 IST
joinshare
Gerrymandering என்றால் என்ன? எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது ஏன்? Explained
Image Credit: AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
குரு பெயர்ச்சி பலன்கள்: 2027-இல் 3 முறை மாறும் குரு... 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு

குரு பெயர்ச்சி பலன்கள்: 2027-இல் 3 முறை மாறும் குரு... 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு

2

டிசம்பர் முதல் வெளுக்கப்போகும் கனமழை.. தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை அப்டேட்

3

Gerrymandering என்றால் என்ன? எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது ஏன்? Explained

4

”எட்டப்பன்கள் இல்லை-கட்டபொம்மன்கள்” ராகுலுக்கு ஸ்டாலின் கொடுத்த தக் ரிப்ளை! அர்த்தம் இதுதான்..?

5

புதுச்சேரி: கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள்... போராடி மீட்ட லைப்கார்டு வீரர்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் தற்போது தேசிய அளவில் பேசுபொருளாகி உள்ளது. அதிலும் தமிழ்நாடு அளவில் திமுகவின் 'திடீர்' ஆதரவு நிலைபாடு பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த மசோதா குறித்து விவாதம் இரு தரப்பிலும் அனல் பறந்து வருகிறது.

இந்த விவாத்தில் தற்போது அதிகம் பேசப்படும் வார்த்தை Gerrymandering. தேர்தலில் மக்களின் வாக்குகள் மாறாமல் இருந்தாலும்... தொகுதிகளின் எல்லைகளை மாற்றுவதன் மூலம் ஒரு கட்சி அதிக இடங்களை வெல்ல முடியுமா...? என்பதுதான் இந்த விவாதத்தின் அடிப்படையாகும். அந்த வகையில் Gerrymandering என்றால் என்ன?, இதற்கும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கும் உள்ள தொடர்பு என்ன?, எதிர்க்கட்சிகளின் இது சார்ந்து அச்சப்படுவது ஏன்? உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | தமிழகத்திற்கு கூடுதலாக எத்தனை சீட்? நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தொகுதி மறுவரையறை!

Gerrymandering என்றால் என்ன?

ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சாதகமாக, வாக்காளர்கள் வசிக்கும் பகுதிகளைத் திட்டமிட்டு வெவ்வேறு தொகுதிகளாகப் பிரிப்பது அல்லது ஒன்றாக இணைப்புதான் Gerrymandering.

அதாவது, மக்களின் வாக்குகளை மாற்றாமல், எந்தெந்த வாக்காளர்கள் எந்தத் தொகுதியில் இடம்பெற வேண்டும் என்பதை மாற்றி தேர்தல் முடிவில் அரசியல் லாபம் பெற முயற்சிப்பது.

Gerrymandering பெயர் அர்த்தம்

Gerrymandering என்பதன் பெயர் 1812ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து உருவானது. அப்போதைய மாசாசூசெட்ஸ் மாகாண ஆளுநர் Elbridge Gerry, தனது கட்சிக்கு சாதகமாகத் தொகுதிகளை மறுவரையறை செய்தார்.

அதில் ஒரு தொகுதி சாலமண்டர் என்ற உயிரினத்தைப் போல வித்தியாசமான வடிவத்தில் இருந்ததால், Gerry மற்றும் Salamander என்ற வார்த்தைகள் இணைந்து Gerrymander என அழைக்கப்பட்டது.

இது எப்படி செய்யப்படுகிறது?

Gerrymandering என்பது Packing, Cracking என இரண்டு முறைகள் உள்ளன.

1. Packing

  • ஒரே இடத்தில் குவிப்பது Packing என என்றழைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள வாக்காளர்களை சில தொகுதிகளில் மட்டும் அதிகமாகக் குவிப்பது. 
  • இதனால், அந்த கட்சி சில தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெறலாம். ஆனால், மற்ற தொகுதிகளில் அந்தக் கட்சியின் வாக்காளர்கள் குறைவாக இருப்பதால் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கலாம்.

2. Cracking

  • பிரித்து பல தொகுதிகளில் சேர்ப்பது தான் Cracking என்றழைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிக்கு ஆதரவான வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளைப் பிரித்து, வெவ்வேறு தொகுதிகளில் சிறுபான்மையாக இடம்பெறச் செய்வது. 
  • இதனால் அவர்கள் எந்தத் தொகுதியிலும் பெரும்பான்மை பெற முடியாத நிலை உருவாகலாம்.
  • இந்த இரண்டு முறைகளும் ஒரு கட்சிக்கு குறைந்த வாக்கு வித்தியாசத்தில்கூட அதிக தொகுதிகளை வெல்ல உதவக்கூடும்.

மேலும் படிக்க | Explainer: தொகுதி மறுவரையறை மசோதாவின் முக்கிய அம்சமாக PoK!! இந்தியா போடும் மாஸ்டர் பிளான், கடுப்பாகும் பாகிஸ்தான்

Delimitation மசோதாவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

  • இந்தியாவில் மக்கள்தொகை மாற்றம், வாக்காளர்களின் எண்ணிக்கை, புவியியல் அமைப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் நடைமுறைதான் தொகுதி மறுவரையறை ஆகும்.
  • இதன் நோக்கம் தொகுதிகளுக்கு இடையேயான மக்கள்தொகை வேறுபாடுகளைச் சீராக்கி பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதாகும்.
  • தற்போதைய 2026 தொகுதி மறுசீரமைப்பு சார்ந்த விவாதத்தில், மக்களவை இடங்களை 50% வரை அதிகரிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்குள் தொகுதிகள் எப்படி மறுவரையறை செய்யப்படும் என்பதுதான் முக்கியமான கேள்வியாக மாறி உள்ளது.
  • மாநிலங்களின் மொத்த இடப் பங்கீடு பாதுகாக்கப்பட்டாலும் அந்த மாநிலத்திற்குள் தொகுதி எல்லைகள் மாற்றப்படும்போது அரசியல் தாக்கம் ஏற்படலாம் என எதிர்க்கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது ஏன்?

  • தொகுதி மறுவரையறை வெளிப்படையாகவும் நடுநிலையாகவும் நடைபெறாவிட்டால், ஆளுங்கட்சிக்கு சாதகமான பகுதிகளை ஒன்றிணைக்கலாம் அல்லது எதிர்க்கட்சிக்கு ஆதரவான பகுதிகளைப் பல தொகுதிகளாகப் பிரிக்கலாம் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.
  • இதனால், வாக்காளர்களின் ஆதரவு மாறாமல் இருந்தாலும், தேர்தலில் கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை மாறக்கூடும். குறிப்பாக,  தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் செல்வாக்கு, மக்கள் தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவம், மாநிலங்களுக்கு இடையேயான இடப் பங்கீடு போன்ற விவகாரங்கள் ஏற்கெனவே விவாதமாக உள்ளன.
  • ஆனால் தொகுதி மறுவரையறை நடைபெறுகிறது என்பதாலேயே Gerrymandering என்று கூறிவிட முடியாது. மக்கள் தொகை, புவியியல், நிர்வாக எல்லைகள், பொதுமக்களின் வசதி போன்ற நியாயமான காரணங்களின் அடிப்படையில் தொகுதிகள் மாற்றப்படுவதும் அவசியமான நடைமுறைதான்.
  • அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிட்டு எல்லைகள் மாற்றப்பட்டதற்கான ஆதாரம் இருந்தால்தான் Gerrymandering குற்றச்சாட்டை உறுதியாக முன்வைக்க முடியும்.

முடிவில்...

தொகுதி மறுவரையறை என்பது ஜனநாயகத்தில் தேவையான நடைமுறை ஆகும். ஆனால் இந்த நடைமுறை யாருடையே அரசியல் லாபத்திற்காகவும் பயன்படுத்தப்படக் கூடாது.

சுதந்திரமான ஆணையம், வெளிப்படையான விதிமுறைகள் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்கும் வாய்ப்பு ஆகியவை இருந்தால்தான் தொகுதி மறுவரையறை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அதனால், தொகுதி மறுவரையறை மசோதாவைச் சுற்றி Gerrymandering குறித்த விவாதம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | நாடாளுமன்றத்தில் மாறும் இருக்கை அமைப்பு: NDA-க்கு அருகில் செல்லும் திமுக எம்.பி.க்கள், மாறும் அரசியல் களம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
India