• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /”எட்டப்பன்கள் இல்லை-கட்டபொம்மன்கள்” ராகுலுக்கு ஸ்டாலின் கொடுத்த தக் ரிப்ளை! அர்த்தம் இதுதான்..?

”எட்டப்பன்கள் இல்லை-கட்டபொம்மன்கள்” ராகுலுக்கு ஸ்டாலின் கொடுத்த தக் ரிப்ளை! அர்த்தம் இதுதான்..?

ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் பெருந்தலைகள், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பிற்கு முன்னர் ஒரு ஸ்வாரஸ்மான விஷயம் நடந்தது. அது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 29, 2026, 13:21 IST|Updated: Nov 29, 2026, 13:37 IST
joinshare
”எட்டப்பன்கள் இல்லை-கட்டபொம்மன்கள்” ராகுலுக்கு ஸ்டாலின் கொடுத்த தக் ரிப்ளை! அர்த்தம் இதுதான்..?
Image Credit: DMK vs Congress | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
குரு பெயர்ச்சி பலன்கள்: 2027-இல் 3 முறை மாறும் குரு... 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு

குரு பெயர்ச்சி பலன்கள்: 2027-இல் 3 முறை மாறும் குரு... 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு

2

டிசம்பர் முதல் வெளுக்கப்போகும் கனமழை.. தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை அப்டேட்

3

Gerrymandering என்றால் என்ன? எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது ஏன்? Explained

4

”எட்டப்பன்கள் இல்லை-கட்டபொம்மன்கள்” ராகுலுக்கு ஸ்டாலின் கொடுத்த தக் ரிப்ளை! அர்த்தம் இதுதான்..?

5

புதுச்சேரி: கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள்... போராடி மீட்ட லைப்கார்டு வீரர்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தவெகவுடன் என்று, காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்ததோ, அன்றிலிருந்து திமுக-காங்கிரஸ் இடையே அடித்துக்கொள்ளாத குறையாக மோதல் வெடித்துள்ளது. மு.க.ஸ்டாலினை தன்னுடைய சகோதரர் போன்றவர் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, இப்படி மாநில தேர்தலுக்கு பிறகு வேறு முடிவை எடுத்தது, திமுக மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பல்வேறு அரசியல் திருப்பங்கள் நடைப்பெற்று வருகிறது. இந்த சமயத்தில், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் vs ராகுல் ட்வீட்டில் பேசிக்கொண்டது என்ன..?

ராகுல் காந்தி, இன்று காலை ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டார். அதில், தொகுதி மறுவரையரையை ஆதரிப்பது என்று திமுக எடுத்திருக்கும் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கும் பொருட்டு சென்னை வருவதாக தெரிவித்திருக்கிறார்.

My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States. We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration. We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.

— M.K.Stalin (@mkstalin) November 29, 2026

தொடர்ந்து, “தொகுதி விரிவாக்கத்தை 850 இடங்களாக மாற்றுவது இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவரும். இது, இந்தியாவின் ஒட்டுமொத்த தேர்தல் வரைபடத்தையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க பாஜக-ஆர்எஸ்எஸ்-க்கு வரம்பற்ற வாய்ப்பை வழங்கும். சகோதரர் ஸ்டாலின், தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக எப்போதுமே ஒரு பாறை போல உறுதியாக நின்றிருக்கிறார். தேசிய நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, ராகுல்... சென்னையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் - முடிவை மாற்றுமா திமுக?

மு.க.ஸ்டாலின் இதற்கு ஒரு பதிலையும் தெரிவித்திருக்கிறார். அதில், ”அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்றுப் பங்களிப்பை அங்கீகரித்த சகோதரர் ராகுல்காந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து, “நாங்கள் எப்போதும் தமிழ்நாட்டின் நலன்களையும் நமது தமிழ் மக்களின் நலன்களையும் முதன்மையாகக் கருதியே ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம். இந்தப் பாதையில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்லாமல் கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

செல்வப்பெருந்தகை பேச்சு..!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுகவிற்கு ஆதரவாக பதிவிட்டிருக்கிறார். அதில், அவர்

“அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளே!
நாம் விட்டு சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States. We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration. We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.

— M.K.Stalin (@mkstalin) November 29, 2026

பாஜக துணைத்தலைவர் பதிவு..

“வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழ்நாட்டின் பெரிய சுதந்திர போராட்ட வீரர்; எட்டப்பன்தான், பிரிட்டீஷ் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு கட்டபொம்மனை முதுகில் குத்தியது. ராகுல் திமுகவை எட்டப்பன்கள் என முன்னர் கூறியிர்ருந்தார். இப்போது ஸ்டாலின், அதே எட்டப்பன் எனும் பெயரை திமுகவின் முதுகில் குத்தியதால் ஸ்டாலின் ராகுலுக்கு கொடுத்துள்ளார். தன்மையாக ‘சகோதரரே, சென்னைக்கு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்து விடாதீர்கள்” என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Veerapandya Kattabomman was a great freedom fighter from Tamil Nadu and Ettapan was d one who conspired with d British to backstab Kattabomman. Rahul arrogantly called DMK as Ettappans in d past. Now Stalin paid Rahul ‘Ettappan’ back for backstabbing DMK. He politely told ‘brother’ not to come to Chennai with a begging bowl now.

— Ram Madhav (@rammadhav_) November 29, 2026

மறுபரிசீலனை கூட்டம்..!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம், தொகுதி மறுவரையறை குறித்து மறுபரிசீலனை செய்யப்படுமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இது குறித்து கழக தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதே சமயத்தில், தற்போது திமுக கட்சி ஆலோசனை கூட்டத்தையும் கூட்டி, இது குறித்து விவாதித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க | Brother Stalin... இறங்கி வந்த ராகுல் காந்தி... ஸ்டாலின் கொடுத்த பதிலடி - என்னாச்சு?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu