• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தொட்டு பேசிய மிஷ்கின்..Uncomfortable ஆன கீர்த்தி சுரேஷ்? அவரே கொடுத்த பதில்..!

தொட்டு பேசிய மிஷ்கின்..Uncomfortable ஆன கீர்த்தி சுரேஷ்? அவரே கொடுத்த பதில்..!

Written ByYuvashree M
Published: Nov 19, 2026, 17:50 IST|Updated: Nov 19, 2026, 18:05 IST
joinshare
கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் நடிப்பில் உருவாகும் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது; இதில் நடிகரும் இயக்குநருமான மிஷ்கின் கீர்த்தி சுரேஷுடன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

Keerthy Suresh Mysskin Movie1/5

கீர்த்தி சுரேஷ் மிஸ்கின் படம்

திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடனும் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டு, திரைப்படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.
Press Meet2/5

பத்திரிகையாளர் சந்திப்பு

இந்த நிகழ்வினில் பேசிய நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், கீர்த்தி சுரேஷை என்னுடைய மகளைப் போலப் பார்க்கிறேன். அவரிடம் அபாரமான நடிப்புத் திறமை இருக்கிறது. இந்திய சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகைகளில் சாவித்திரி முக்கியமானவர். அந்தப் பெயரில் உருவான படத்தில் கீர்த்தி நடித்திருப்பது மகிழ்ச்சி. அவர் இன்னும் 20 முதல் 25 ஆண்டுகள் தொடர்ந்து நடிக்க வேண்டும். இசையமைப்பாளர் சாம் C.S. இந்தப் படத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இயக்குநரின் படைப்பை மேலும் உயரத்துக்குக் கொண்டு செல்லும் திறமை அவரிடம் இருக்கிறது. பிரவீனிடம் ஈகோ இல்லாததால், மற்ற கலைஞர்களின் பங்களிப்பையும் மனதாரப் பாராட்டுகிறார் என குறிப்பிட்டிருக்கிறார்.
Sathiyavan Savithri3/5

சத்தியவான் சாவித்ரி குறித்து பேச்சு

சினிமா என்பது வெறும் தொழில் கிடையாது; மனிதர்களை நேசிக்கவும் அழகான உணர்வுகளை அனுபவிக்கவும் கற்றுக்கொடுக்கும் கலை. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர்களும் நல்ல திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றியிருக்கிறார்கள். ‘சத்தியவான் சாவித்திரி’ படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மிஷ்கின் தன் பேச்சை முடித்துக்கொண்டார்.
Keerthi Suresh Looked Uncomfortable4/5

கீர்த்தி அசௌகரியமாக உணர்ந்தாரா?

மிஸ்கின் இந்த நிகழ்வில், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இந்த நிகழ்வில், கீர்த்தி சுரேஷை தொட்டு பேசினார் மிஷ்கின். இதை இணையத்தில் வைரலாக்கிய நெட்டிசன்கள், இந்த இடத்தில் கீர்த்தி சுரேஷ் அசௌகரியமாக உணர்வதாக கூறி வந்தனர். இதற்கு கீர்த்தி சுரேஷ் பதிலளித்திருக்கிறார். அதில், ”என் முகத்தில் உங்களுக்கு எங்கு அசௌகரியம் தெரிகிறது..?” என்று கேட்டிருக்கிறார்.
Keerthi Suresh Reply5/5

கீர்த்தி சுரேஷின் பதில்

“முதலாவதாக, என் முகத்தில் உங்களுக்கு எங்கே சங்கடம் தெரிகிறது? நாங்கள் தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பந்தம் போல இருக்கிறோம் என்று அவரோ நானோ சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? இரண்டாவதாக, எனக்குச் சங்கடமாக இருந்தது என்று வைத்துக்கொண்டால், திரைப்படங்களில் எங்களைத் தொடுவார்கள் என்பதால் பொது இடங்களிலும் நான் அதனுடன் இயல்பாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? நீங்கள் சில விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் சகோதரா” என்று கீர்த்தி தன் ரிப்ளையில் குறிப்பிட்டுள்ளார்.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.